சமீபத்தில் பெய்த மழையால் குளம் போல் காணப்படும் தேசிய நெடுஞ்சாலை : வைரல் வீடியோ

பீகாரில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பள்ளங்களாக காணப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மதுபனி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 227-ல், சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி ஆங்காங்கே குளம் போல் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு

காந்திநகர்: குஜராத் வன்முறை வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து குஜராத் முழுவதும் மோதல்கள் வெடித்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் … Read more

இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி – பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் இடைத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, சங்கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பதவி வகித்து வந்தார். இவர் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதன் காரணமாக, சங்கரூர் மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி பேச்சு?

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமின் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில், குடும்பத்தினர் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க உத்தவ் தாக்கரேவின் மனைவி மூலம் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் … Read more

நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்

காளஹஸ்தி: நடுரோட்டில் இளம்பெண்ணை கல்லால் தாக்கியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொன்று ஏரியில் சடலத்தை வீசிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.என்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவரது மனைவி மோகனா என்கிற ரோஜா(23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு பிரகாஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ரோஜாவை துன்புறுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி கணவருடன் கோபித்துக்கொண்டு ரோஜா தனது … Read more

பொது இடத்தில் இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: பட்டியலின மற்றும் பழங்குடியினரை பொது இடத்தில் இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டம் எல்முடியை சேர்ந்தவர் மோகன் (42). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஜெயகுமார் நாயர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் அடித்தளத்தில் வேலை செய்தார். அப்போது ஒப்பந்ததாரர் ரத்தீஷ் ப‌யஸ், ‘இனி இங்கு வேலை செய்யக்கூடாது’ என மோகனிடம் … Read more

மழை வெள்ளம் : மேகாலயாவில் லட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு.. விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன. அசாமில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் சுமார் 203 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. C-130, … Read more

நாளுக்கு நாள் பரபரப்பாகும் சிவசேனா மோதல் புதிய அணி தொடங்கினார் ஷிண்டே: 16 அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு கட்சி நீக்க நோட்டீஸ்

மும்பை:  உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி  அணியை சேர்ந்த 16  எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். இந்நிலையில், சிவசனோ பாலசாகேப் என்ற பெயரில்  அதிருப்தி அணியினர் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஏக்நாத்  ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அசாமில் … Read more

ஊழல் புகாரில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அவமானத்தில் தற்கொலை

சண்டிகர்: பஞ்சாபில் ஊழல் புகாரில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் சோதனை நடந்தபோது அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநில ஓய்வூதிய துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இதற்கு முன்பு சஞ்சய் பாப்லி கழிவு நீரகற்று வாரிய தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, பைப்லைன் அமைப்பது தொடர்பான டெண்டரை ஒதுக்குவதற்காக 1 சதவீதம் லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவின் ஹெல்ப்லைன் எண்ணில் ஒப்பந்ததாரரான சஞ்சய் குமார் … Read more

“விண்வெளித் துறையிலும், விளையாட்டிலும் முன்னேற்றம்” – பிரதமர் மோடி பெருமிதம்

விண்வெளித் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் தொழிலாளர்களின் பிள்ளைகள் பதக்கங்களை வென்று முன்னேறியுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பித்தபோது குடிமக்களின் வாழ்வுரிமை, தனிமனிதச் சுதந்திரம் உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.  புகழ்பெற்ற பாடகர் கிசோர் குமார் அரசைப் போற்றிப் பாட … Read more