மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்

பெங்களூரு: பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.6 கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளராக ஹரிசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர் ஜெயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த வங்கியில் அனிதா என்பவர் தனது கணக்கில் ரூ.1.32 கோடியை டெபாசிட் செய்தார். … Read more

ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி! 2 நாள் பயணத்தில் இவர்களையெல்லாம் சந்திக்கிறார்!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனி செல்கிறார். 48ஆவது ஜி-7 மாநாடு ஜெர்மனியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி செல்கிறார். G7 என்பது பொருளாதார ரீதியாக முன்னேறிய உலகின் ஏழு நாடுகளின் முறைசாரா குழுவாகும். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா … Read more

ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் – 8 பேர் கைது

வயநாடு: கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் அலுவலம் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாட்டில் அவரது அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இதனால் பெரும் … Read more

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கேரளாவில் அமைப்பு

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை டாடா நிறுவனம் கேரள மாநிலத்தில் அமைத்துள்ளது. காயங்குளத்தில் உள்ள கழிமுகத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையம் 101 புள்ளி 6 மெகா வாட் உற்பத்தி திறன்கொண்டது என டாடா பவர் சோலார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிலையான ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான முக்கிய நடவடிக்கையாக இதனை கருதுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார்.  Source link

திருப்பதி கோயிலில் ரூ.4.30 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இலவச தரிசன வரிசையில் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று 71,589 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.30 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சனிக்கிழமையான இன்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள … Read more

காசி, காயாவுக்கு விமான சுற்றுலா அறிவித்தது IRCTC.. பேக்கேஜ் விவரம் என்னென்ன தெரியுமா?

IRCTC சார்பில் காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இதுவரை மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது. அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. அதற்கான 7 நாள் சுற்றுலா ஜூலை 27ம் தேதி … Read more

வெடிகுண்டு மிரட்டல் வழக்கு – தமிழக இளைஞரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவில் 4 இடங்களில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அலுவலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உ.பி. சுல்தான்பூர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நீல்காந்த் மணி பூஜாரி புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் தமிழகத்தின் புதுக்கோட்டைடை சேர்ந்த ராஜ் முகம்மது (22) என்பவரை கைது செய்திருந்தனர். தற்போது லக்னோ ஏடிஎஸ் படை காவலில் ராஜ் முகம்மது இருக்கிறார். இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏடிஎஸ் … Read more

முகநூல் காதலனுடன் தனியாக வசித்து வந்த இன்ஸ்டாகிராம் மாடல்.. கைகளை கட்டி மாடியில் இருந்து தூக்கி வீசிய முன்னாள் கணவர்..!

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் முகநூல் காதலனுடன் தனியாக வசித்துவந்த இன்ஸ்டாகிராம் மாடல் நடிகையை அவரது முன்னாள் கணவர், 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்தார். கடந்த 2017ம் ஆண்டு தனது கணவர் ஆகாஷ் கவுதமை விவாகரத்து செய்த பின்னர், முகநூல் மூலம் அறிமுகமான விபுலுடன் சேர்ந்து மாடல் நடிகை ரித்விகா சிங் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் கணவர் ஆகாஷ், ரித்விகாவின் கைகளை கயிற்றால் கட்டி பால்கனியில் இருந்து … Read more

தொழில்துறை வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

டெல்லி: தொழில்துறை வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த வைத்துள்ளார் எனவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக … Read more