நடிகை பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் திலீப் இன்று மீண்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையான திலீப் மீது விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதற்காக அவரை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்கள் பயன்படுத்திய செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். செல்போனில் இருந்த சில ஆதாரங்களை திலீப், அழித்துவிட்டதாக போலீசார் … Read more

புதுச்சேரியில் என்.ஆர்.காங். – பாஜ கூட்டணி உடைகிறது: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக முடிவு; மேலிடமும் கிரீன் சிக்னல்

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி உடைகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் அமைப்பு செயலாளரிடம், எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மேலிடமும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.புதுச்சேரியில் கடந்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி பதவி ஏற்பு, அமைச்சரவை இலாகா பங்கீடு, நலத்திட்டங்கள் செயல்படுத்துவது என பலவற்றிலும் பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் முரண்பாடு முற்றி வருகிறது. தேர்தலுக்கான இடப்பங்கீட்டின்போதே பாஜ தனது ஸ்டைலில் … Read more

நாட்டில் முதல்முறையாக அமைக்கப்பட்ட 'இரும்பு சாலை'

நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் இரும்புக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை ஒன்றிணைந்து, ஹசிரா துறைமுக நகரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலையை அமைத்துள்ளனர். மற்ற சாலைகளைக் காட்டிலும் 30 சதவிகிதம் தடிமன் குறைக்கப்பட்டுள்ளதாவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் சாலை சேதமடைவதைத் தடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செலவு குறைவதோடு, இரும்புக் கழிவுகளை இனி பயனுள்ளதாக உபயோகிக்க … Read more

பாஜக தொண்டர்களை தாக்கிய வழக்கு: திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

இந்தூர்: பாஜக தொண்டர்களை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஜூலை 17-ம் தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்கு திக்விஜய் சிங் சென்றார். அவருக்கு எதிராக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் காங் கிரஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு … Read more

மேற்கு வங்க சட்டசபையில்.. எம்.எல்.ஏக்கள் "கும்மாங்குத்து".. 5 பாஜகவினர் சஸ்பென்ட்!

மேற்கு வங்க மாநில சட்டசபையில் திரினமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்களிடையே கடும் மோதல் வெடித்தது. சரமாரியாக இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ஐந்து எம்எல்ஏக்கள் சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும் – ஆளுநர் தங்கருக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அதேபோல பாஜகவினருக்கும், திரினமூல் காங்கிரஸுக்கும் இடையே மோதல் எழாத நாளே இல்லை. இந்த நிலையில் இன்று அம்மாநில சட்டசபையில் இரு … Read more

பஞ்சாப்பில் வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம்: முதல்-மந்திரி தகவல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரே‌ஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரே‌ஷன் பொருட்களை வழங்குவதற்கான நேரத்தை குடும்ப அட்டை தாரர்களிடம் கேட்டு வினியோகிக்கப்படும். ரே‌ஷன் கடைக்கு சென்றாலும் பொருட்களை … Read more

மத்திய பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை: டி.கே.எஸ் இளங்கோவன்

டெல்லி: மத்திய பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார். நிதி மசோதா மீதான விவாதத்தில்  மாநிலங்களவையில் திமுக எம்.பி. கூறினார்.

ரூ.100 கோடி நிதி பற்றாக்குறையில் தள்ளாடும் சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம் 100 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் தள்ளாடுவது தெரிய வந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையால் ஓய்வூதியம், ஊதியம் வழங்குவதில் எழும் சிக்கல்களைத் தவிர்க்க தமிழக அரசு 88 கோடி ரூபாய் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்துள்ளது. 1,400க்கும் மேல் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகை, பேராசிரியர்களுக்கான ஊதியம் போன்றவற்றுக்கே பெரும்பாலான வருவாய் செலவிடப்படுவதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். பேராசிரியர்களுக்கான ஊதிய … Read more

தொடங்கியது 2 நாள் பொது வேலைநிறுத்தம்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து சேவை பாதிப்பு

புதுடெல்லி: மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய … Read more

வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- மத்திய நிதி மந்திரி விளக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் இன்று வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் அவர்களது செயல்படாத சொத்துகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து திமுக எம்.பி. டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.  அப்போது அவர் பேசியதாவது:  மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக  வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளது.  கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  திரும்ப வராத  … Read more