பிஹார் மாநிலத்தில் சொந்த ஊரில் முதல்வர் நிதிஷ் குமார் மீது தாக்குதல்

பாட்னா: பிஹாரின் பாட்னா மாவட்டத்தில் பக்தியார்பூர் நகர் அமைந்துள்ளது. இது, மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த ஊராகும். அந்த நகரில் சுதந்திர போராட்ட தலைவர் ஷில்பத்ரா யாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரின் சிலைக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மர்ம நபர் ஒருவர் வேகமாக மேடையேறி முதல்வர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். அங்கிருந்த போலீஸார், மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் உள்ளூரை … Read more

தன்பாலின உறவு: யாருக்கு மனநல ஆலோசனை தேவை?

சர்ச்சைக்குரிய, ‘காஷ்மீ்ர் பைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அண்மையில் கூறிய கருத்தும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “நான் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவன்தான். ஆனால், அதை யாரிடமும் சொல்வதில்லை. ஏனென்றால், போபாலைச் சேர்ந்தவர்கள் என்றாலே பொதுவாக தன்பாலின உறவாளர்கள் என்ற கருத்து இருக்கிறது. ஒருவேளை, அவர்களின் நவாபி ஸ்டைல் வாழ்க்கை முறையால்கூட அதுபோன்ற எண்ணம் வந்திருக்கலாம்” என்றார். இதுகுறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான … Read more

இன்றும் நாளையும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்.. போக்குவரத்து, வங்கி, காப்பீட்டுத் துறை பணிகள் பாதிப்பு

அனைத்துத் தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்துள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கைகள் தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிராகவும், நாட்டு நலனுக்கு எதிராகவும் உள்ளதாகக் கூறித் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது உள்ளிட்ட அரசின் கொள்கைகளைக் கண்டித்து இன்றும் நாளையும் பொது வேலைநிறுத்தத்துக்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி … Read more

ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும். அதன்படி தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 … Read more

டெல்லியில் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை : 3 நாள் பயணமாக சென்னையில் இருந்து 30ம் தேதி இரவு விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை 31ம் தேதி மதியம் 1 மணிக்கு பிரதமரிடம் தருகிறார்.

அனுமதியின்றி வெளியே சென்ற மாணவனுக்கு பிரம்படி தந்த டியூஷன் ஆசிரியர்-நடந்தது என்ன?

குஜராத் மாநிலத்தில் டியூஷன் ஆசிரியரின் அனுமதியின்றி வெளியே சென்ற மாணவனை சரமாரியாக ஆத்திரத்தில் தாக்கியுள்ளார் அந்த ஆசிரியர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்று ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆசிரியரிடம் பிரம்படி வாங்கிய மாணவனின் பெயர் நீலஷ் உனட்கட் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழன் அன்று நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் டியூஷனில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை முன்னிட்டு சிறப்பு தேர்வு நடத்த … Read more

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள போக்துய் கிராமத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாது ஷேக் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் கிராமத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்து கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிர்பும் வந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். இந்த வழக்கில் 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரி … Read more

ஆபத்து… மருந்து விலை உயர்கிறது

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து குரல் கொடுக்கிறோம். அதை ஒன்றிய அரசு பொருட்படுத்தாவிட்டாலும், எதிர்க்குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. பெட்ரோல் போலவே – அல்லது, அதைவிட அதிகமாக – மக்களைப் பாதிக்கக்கூடிய ஒரு விலை உயர்வைப் பெரும்பாலோர் அறியவில்லை. அது – அவசியமான மருந்துகளின் விலையேற்றம்! இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% வரை … Read more

இன்றும், நாளையும் நாடு தழுவிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், அலுவலக பணிக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் நாடு … Read more

கேரளாவில் கோவில் விழாவில் கதகளி நடனமாடிய வயநாடு மாவட்ட பெண் கலெக்டர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் கீதா. இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளார். கலெக்டர் பொறுப்புக்கு வந்த பின்பும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடன பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும் கேரள பாரம்பரிய நடனமான கதகளியையும் கற்று வந்தார். இந்த நிலையில் வயநாடு பகுதியில் உள்ள வள்ளியூர் காவு கோவில் விழாவில் கலெக்டர் கீதாவின் கதகளி நடன … Read more