சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரீக் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிப்போஸ் – பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெஞ்சமின் போன்சி 6(4)-7(7) ,6-3,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் சிட்சிபாஸ் தொடரிலிருந்து வெளியேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  … Read more

IPL 2026: மினி ஏலத்தில் இந்த 2 வீரர்களுக்கு கோடிகள் கொட்டும் – அஸ்வின் கணிப்பு

IPL 2026 Mini Auction Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர நிறைவடைந்த உடனேயே ஐபிஎல் 2026 மினி ஏலம் குறித்த பேச்சுகள் கிளம்பத் தொடங்கிவிட்டன.  எந்தெந்த வீரர்கள் டிரேட் செய்ய வாய்ப்புள்ளது, எந்தெந்த வீரர்களை அணிகள் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்போகிறார்கள், அடுத்த ஏலத்தில் எந்தெந்த புதிய வீரர்கள் அணிகள் குறிவைக்கும் என சமூக வலைதளங்கள் மூலம் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இவற்றை அலசி ஆராய்ந்து வருகின்றனர் எனலாம். வரும் டிசம்பர் மாதத்திற்கு மினி ஏலம் … Read more

உள்ளே வரும் முக்கிய வீரர் – சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு… இந்திய அணியில் பெரிய சிக்கல்!

Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் ஆசிய கோப்பை போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் இந்த முறை ஆசிய கோப்பையும் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. கடந்த முறை ஓடிஐ வடிவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. Asia Cup 2025: ஆசிய கோப்பை பார்மட் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய … Read more

திருமணத்திற்கு முன்பே 5 குழந்தைகள், 9 வருட டேட்டிங்! 40 வயதில் காதலியை கரம் பிடிக்கும் ரொனால்டோ

Cristiano Ronaldo Engaged With Georgina : போர்துகீசிய கால்பந்து வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ, பல ஆண்டுகளாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் குறித்தும், அவர் திருமணம் செய்துகொள்ள போக இருக்கும் அவரது காதலி குறித்தும் இங்கு பார்ப்போம்.  ப்ரப்போஸ் செய்தார்… 5 குழந்தைகள், 9 வருட டேட்டிங்கிற்கு பிறகு, ஒரு வழியாக தனது காதலி ஜார்ஜினாவிற்கு கிரிஸ்டியானாே ரொனால்டோ ப்ரப்போஸ் செய்திருக்கிறார். இது குறித்து அவரது காதலி ஜார்ஜினா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில், … Read more

ஆசிய கோப்பை தொடர்! பும்ராவின் முடிவால் இந்திய அணியில் திடீர் திருப்பம்!

வரவிருக்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணிதேர்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நிச்சயமாக அணியில் இடம் பெறுவார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் முடிவு, இந்திய அணிக்கு ஒரு பெரும் பலமாக பார்க்கப்பட்டாலும், அக்டோபர் மாதம் தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பங்கேற்பை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், … Read more

அங்கேதான் ஹர்திக் போன்ற ஆல் ரவுண்டர் தேவை – இந்தியாவுக்கு நியூ. முன்னாள் வீரர் அட்வைஸ்

வெலிங்டன், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன. புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக … Read more

ஆசிய கோப்பை 2025: இந்த 3 வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஒரு மாதம் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அடுத்ததாக செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தொடங்கவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்காக இந்திய அணி தயார் ஆகி வருகிறது. இதற்கான அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சில வீரர்கள் நீக்கப்படலாம் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. சுப்மன் கில் … Read more

நானாக இருந்தால் அம்பானியிடம் பேசி பும்ராவை… – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறிப்பிட்ட 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடினார். பணிச்சுமையை காரணம் காட்டி 2 டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார். இதில் அவர் விளையாடாத அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. அவர் விளையாடிய போட்டிகளில் 2-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை … Read more

ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற ஜூனியர் மகளிர் அணி.. பரிசுத்தொகை அறிவித்த இந்திய கால்பந்து சம்மேளனம்

யாங்கோன், 12-வது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் (20 வயதுக்கு உட்பட்டோர்) அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்தது. இதில் மியான்மரில் உள்ள யாங்கோன் நகரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு கடைசி லீக்கில் இந்திய அணி மியான்மர் உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை தோற்கடித்து ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. பூஜா 27-வது … Read more

அடுத்த ஐ.பி.எல். சீசனில் நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும்.. ரசிகரின் கோரிக்கைக்கு தோனி பதில்

சென்னை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக இந்த சீசனின் தொடக்க கட்டத்தில் … Read more