IND vs ENG: ரிஷப் பந்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை? ஏன் தெரியுமா?

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் அடித்த நிலையில்,  இங்கிலாந்த அணி 465 ரன்கள் அடித்தது. பரபரப்பாக நடைபெற்ற மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது. கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மான் கில் களத்தில் உள்ளனர். ஜெய்சவால் 4 ரன்களுக்கும், … Read more

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் இடையிலான மகளிருக்கான புரோ ஆக்கி லீக்கில் ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தகிடுதத்தம் போடுகிறது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். முன்னதாக ஆஸ்திரேலியா, அர்ஜென்டினாவிடம் தலா 2 முறையும், பெல்ஜியத்திடம் ஒரு தடவையும் தோற்று இருந்தது. மொத்தத்தில் இந்திய பெண்கள் அணி இதுவரை 14 ஆட்டங்களில் ஆடி … Read more

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கேரளா

சென்னை, தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 2-0 என்ற கோல் கணக்கில் இமாச்சலப் பிரதேசத்தை சாய்த்தது. மற்றொரு ஆட்டத்தில் கேரளா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை துவம்சம் செய்தது. ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் மராட்டியம் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகாரையும், … Read more

டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி அணிகள் இன்று மோதல்

நெல்லை, 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் … Read more

இங்கிலாந்து அணிக்காக விளையாடப்போகும் 4 இந்திய வீரர்கள்!

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணியின் சில வீரர்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் 2025 சீசனில் விளையாட உள்ளனர். இதற்காக கவுண்டி அணிகளுடன் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு சென்று கிரிக்கெட்டில் ஆடுவது தங்களின் திறமையை அதிகரிக்கும் என்றும், மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்றும் வீரர்கள் நம்புகின்றனர். இதற்கு முன்பு பல வீரர்கள் கவுண்டி … Read more

’2013ல் ஞாபகமறதியில் அப்படி செய்து விட்டேன், நல்ல வேளையாக..’ ரோகித சர்மா கலகல பேச்சு

Rohit Sharma Latest Interview : இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் இப்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதேநேரம் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாடு சென்றுவிட்டு மும்பை திரும்பியுள்ளார். அங்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மும்பை இந்தியன்ஸ் … Read more

இந்திய அணியின் மேஜர் தப்பு… இவர் தேவையே இல்லை – அன்றே சொன்னார் அஸ்வின்

India National Cricket Team: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு (England vs India) இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy) கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. லீட்ஸ் நகரின் ஹெடிங்லி நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் சரி பாதியாக வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனலாம்.  ENG vs IND: இந்தியா 471 … Read more

தோனி போல் வந்திருக்க வேண்டிய மூன்று வீரர்கள்! ஆனால் கோட்டை விட்டனர்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி போல் ஒரு சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது. காரணம் இந்திய அணிக்கு அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார், அதனை தொடர்ந்து ஒரு நாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. ஐசிசியின் மூன்று உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனி தான் வைத்துள்ளார். தோனியுடன் … Read more

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: பேயர்ன் முனிச் அடுத்த சுற்றுக்கு தகுதி

மியாமி கார்டன்ஸ், கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். நேற்று முன்தினம் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் போகா ஜூனியர்சை (அர்ஜென்டினா) … Read more

டி.என்.பி.எல். 2025: நெல்லை அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ்

நெல்லை, டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜிதேந்திர குமார் 9 ரன்களிலும், அவரை தொடர்ந்து சச்சின் 10 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். … Read more