கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!!

இலவச உணவுப்பொருட்கள் வாங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அதே நிலைக்கு செல்கிறது. பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரமலான் மாதத்தை ஒட்டி கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் … Read more

கழுத்தை நெரித்த கல்லூரிக் காதல்… மாணவியின் சடலத்தை மூட்டை கட்டிய விபரீதக் காதலன் ..!

கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரிக்கு சென்றபோது  மாயமான மாணவி, கொங்கர் பாளையம் தோட்டத்துக்கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவியின் சடலத்தை மூட்டை கட்டி வீசிய மாணவன்  போலீசில் சிக்கி உள்ளார். காதல் கசந்ததால் கழுத்தை இறுக்கிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டுமாரியம்மன் கோயில் அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக, பங்களாப்புதூர் போலீசாருக்கு கிடைத்தது. … Read more

கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்த மின் மாற்றிகளில் சென்சார் மீட்டர் பொருத்தம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: வழித்தடங்களில் ஏதேனும் பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தும் வகையில், மின்மாற்றிகளில் சென்சார் கருவியுடன் மீட்டர்பொருத்தப்படுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: கோ.அய்யப்பன் (திமுக): கடலூர் தொகுதியில் சிறு தொழிற்சாலைகூட இல்லை. ஏற்கெனவேகடலூரில் இருந்த தொழிற்சாலைகள், தொகுதி பிரிக்கப்பட்டபோது குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு சென்றுவிட்டதால், புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: கடலூர் தொகுதியை பொறுத்தவரை சிறு தொழிற்சாலை … Read more

தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி, தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் முனைவர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் முனைவர் சக்தி குமார், முனைவர் சரண்யாஸ்ரீ சக்தி குமார், கல்லூரி முதல்வர் முனைவர் கே.மணி, பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஊடகவியலாளர் … Read more

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு: சி.சி.டி.வி பதிவு இல்லாததால் போலீஸ் திணறல்

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு: சி.சி.டி.வி பதிவு இல்லாததால் போலீஸ் திணறல் Source link

64 தூண்கள், 400 மரச்சிற்பங்கள்..!! உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது..!!

சைவத்தின் தலைமை இடமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை பெற்றது. அதன்படி நடப்பாண்டு  திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் தொடங்கியுள்ளது. விண்ணை முட்டும் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆழித்தேரானது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகள் வழியாக திருவாரூர் நகரில் பிரம்மாண்டமாக அசைந்தாடி வரும் அழகு காண்போரை … Read more

பாஜக ஒரு கட்சியே கிடையாது – உதயநிதி அதிரடி!!

தமிழ்நாட்டில் பாஜக ஒரு கட்சியே கிடையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டுத் திடலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திமுக மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு பொற்கிழி வழங்கினர். தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, திமுக இளைஞரணி சார்பில் கடந்த 2 மாதமாக 50 லட்சம் ரூபாய் … Read more

பாஜகவை பார்த்து பயப்படப் போவதில்லை; மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம்: முகுல் வாஸ்னிக் உறுதி

சென்னை: ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ பாஜகவை பார்த்து பயப்படப் போவதில்லை. மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம் என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமை தாங்கி னார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, … Read more

பாஜக மீது டிடிவி தினகரன் அதிருப்தி? எல்லாத்துக்கும் இவங்க தான்ங்க காரணம்!

அதிமுகவோடு கூட்டணி என்றால் தலைவனாக அல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறி அண்ணாமலை அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பினார். அதே போல் கூண்டை விட்டு கிளி பறக்க தயாராகிவிட்டது என்று பூடகமாகவும் பேசினார். இதனால் பாஜக தலைமையில் புதிய அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி! பாஜக போன்ற தேசிய கட்சியில் கூட்டணி முடிவை மேலிடம் தான் எடுக்கும். பாஜக தலைமையோ அதிமுகவுடன் கூட்டணியை தொடரவே விரும்புகிறது. உள்துறை அமைச்சர் அமித் … Read more

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.