இயக்குனர் பாலாவின் “வணங்கான்” படப்பிடிப்பில் தாக்கப்பட்ட துணை நடிகை.. சம்பள பாக்கியை பெற்றுத்தர கோரி புகார்

இயக்குனர் பாலாவின் “வணங்கான்” படப்பிடிப்பில் தாக்கப்பட்ட துணை நடிகை லிண்டா, தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தன்னுடன் வந்த துணை நடிகைகளுக்கான சம்பள பாக்கியை பெற்றுத்தரக்கோரியும், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். நடிகர் அருண் விஜய் நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்திற்காக, ஜிதின் ஜிஜோ என்பவர், கேரளாவில் இருந்து லிண்டா உட்பட 9 துணை நடிகைகளை வரவழைத்து நடிக்க வைத்துள்ளார். 9 நடிகைகளுக்கு 3 நாட்கள் சம்பளமாக 22,600 ரூபாய் … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு மேற்கொள்வதில் ஆட்சேபனை உள்ளதா? – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதாக கூறி நடந்த போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை … Read more

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்தாண்டும் 83ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் இன்று துவங்கியது. இதில் முதல் நிகழ்வாக இன்று காப்புகட்டு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மட்டுமின்றி … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகளில் நாளை தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை தீர்ப்பளிக்க உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் … Read more

யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? மகளிர் உரிமைத் தொகை குறித்து ஸ்டாலின் விளக்கம்

யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? மகளிர் உரிமைத் தொகை குறித்து ஸ்டாலின் விளக்கம் Source link

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 50 பேர் பலி | ஆளுனர் தன் கடமையை உடனடியாக செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு  அடுத்தடுத்து இருவர் தற்கொலை;  தற்கொலை எண்ணிக்கை 50-ஆக உயர்வு: தடை சட்டத்திற்கு  ஆளுனர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் வேடப்பட்டு முரளி,  திருச்சி மாவட்டம் மணப்பாறை வில்சன்  ஆகியோர்  ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி திருவெறும்பூரில் … Read more

பரபரப்பு! முன்னாள் முதலமைச்சர் வீட்டில் கல்வீசி தாக்குதல்!!

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.கவும், காங்கிரஸும் இரண்டு பிரதான கட்சிகள். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கி, இடஒதுக்கீட்டில் சிற மாற்றங்களைச் செய்தது. அதேபோல, பட்டியலின மக்களுக்கான … Read more

1000 ரூபாய் உரிமைத் தொகை யார்-யாருக்கு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாட்டில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்  ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுகுறித்து பதில் அளித்து பேசிய அவர், இத்திட்டத்தால் மீனவ பெண்கள், கட்டுமான பெண் தொழிலாளர்கள், நடைபாதை வணிக பெண்கள், வீடுகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவார்கள் என்றார். இத்திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை  நேரடியாக செலுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். … Read more

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அரிசி, சர்க்கரை வழங்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வெள்ளை அரிசி, சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்கள் விநியோகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: “புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வின்போது அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பலக்கட்ட போராட்டங்களை நடத்துவது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான். இதன்மூலம் கடந்த காலங்களில் … Read more

திமுகவிற்குள் ஊடுருவும் ஆர்எஸ்எஸ்.! – அமைச்சர் அன்பில் மகேஷ் டார்கெட்.?

தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்து திமுகவிற்குள் ஆர்எஸ்எஸ் நபர்கள் ஊடுருவுவதாக அரசியல் நோக்கர்களும், திராவிட ஆதராவாளர்களும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் போலீஸ் உள்ளதா, அல்லது ஆர்எஸ்எஸ் நபர்களால் தமிழ்நாடு காவல்துறை இயங்குகிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சமீப காலமாக கேள்வி எழுப்பி வருகிறார். அந்தவகையில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்களை தொகுக்கும் அரசியல் நோக்கர்கள், திமுகவிற்குள் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் உள்ளதாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். சம்பவம் 1 சிலநாட்களுக்கு … Read more