மாத சம்பளம் வாங்குவோர் தலையில் விழுந்த இடி!!

அதானி நிறுவனத்தால் மாத சம்பளம் வாங்குவோர் தலையில் இடி விழுந்துள்ளது. அதானியின் நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனத்தின் முதலீடு செய்த முதலீட்டு தொகையை விட எல்ஐசிக்கு அதிக நஷ்டம் … Read more

சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்த நிலையில், எதேச்சையாக தானும் கருப்பு உடையுடன் வந்த வானதி சீனிவாசன்…!

ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கருப்பு புடவையுடன் வந்தது பேசுபொருளானது. சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்டோர் வானதியின் கருப்பு உடை குறித்து கேள்வி எழுப்ப, சிரித்துக் கொண்டே அவர்களை கடந்து சென்றார். சட்டப்பேரவை விவாத நேரத்தில் “காங்கிரஸ்காரர்கள்தான் யூனிஃபார்பில் வந்திருக்கிறார்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்திருப்பதுபோல் தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி … Read more

குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம்: சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-ல் அறிவிப்பு 

சென்னை: பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24-ல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது தீர்வு காண இந்தத் திட்டத்தை மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதன் விவரம்: சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் குறை தீர்ப்பு அமைப்பு (Public Grievance Redressal System) வாயிலாக தற்போது கீழ்காணும் முறைகளில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன்படி 1913 அழைப்பு மையம் மூலமாக பொது … Read more

க்ரூப் 4 மறுதேர்வு நடத்த TNPSC முன்வரவேண்டும் – அண்ணாமலை அழுத்தமான கோரிக்கை

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான க்ரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவித்து, கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடத்தியது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இந்நிலையில், க்ரூப் 4 தேர்வில் தென்காசி ஆகாஷ் பிரெண்ட்ஸ் அகாடெமி பயிற்சி மையத்தில் … Read more

ஆலங்காயம் அருகே லாரி மோதி 6 வயது சிறுமி பலி

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மினி லாரி மோதி 6 வயது சிறுமி உயிரிழந்தார். தக்காளி லோடு ஏற்றிச் சென்ற மினி லாரி மோதியதில் சிறுமி கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாருக்கெல்லாம் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கும்? – பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.  தொடக்கத்திலேயே, ”இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது” என்று அழுத்தமாக தனது கருத்தினை அவர் பதிவு செய்தார். பின்னர் பேசிய முதல்வர், ”அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களை வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து … Read more

சென்னை : அரசு பள்ளிக்கட்டிடங்களை மறுசீரமைப்பதற்கு ரூ.25 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

இன்று சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-  “அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், செய்முறை வகுப்புகளை சிறப்பாக நடத்துவதற்கு ஆய்வகங்களின் கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.  சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பதற்கும், அனைத்து பகுதிகளில் உள்ளவர்களையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக ‘பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்’ அமைத்து தரப்படும்.  பழுதடைந்துள்ள பள்ளிக்கட்டிடங்களை மறுசீரமைப்பதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட … Read more

10 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரம்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்சா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரின் 10 வயது மகன் விவேக் என்பவரை கடந்த 23ஆம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கிருஷ்ணா வர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன் உடலம் கிடப்பதாக … Read more

“4 பேரா, 400 பேரா என்பது கவலையில்லை” – அண்ணாமலை விமர்சனத்துக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

சென்னை: “தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் நோக்குடன் நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்தப் போராட்டமே தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பாஜகவினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை என்று தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், … Read more