மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் முதல்முறையாக மகளிா் ப்ரீமியா் லீக் போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்தது. அதன்படி, மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகள் மார்ச் 4 முதல் 26-ம் தேதி வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் சாம்பியன் கோப்பைக்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சும், மெக் லானிங் … Read more

“மனிதத் தன்மையற்ற செயல்” – நெல்லை காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் இதில் ஈடுபட்ட நெல்லை காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பற்களை உடைத்து, வாயில் … Read more

அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் முறை: மீண்டும் சொன்ன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் தகுதியான நபர்களை பணியமர்த்துவது தொடர்பாக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுவதால் பல்வேறு குளறுபடிகளும் நடைபெறுகின்றன. நில அளவையாளர், குரூப் 4 தேர்வுகளில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அடுத்தடுத்த பதிவெண் கொண்ட சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதும், ஒரே … Read more

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிக்கு களக்காடு புலிகள் காப்பகத்தில் 30 இடங்களில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தம்

களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்காக 30க்கும் மேற்பட்ட இடங்களில் 60 தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், ராஜநாகம், கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் குறித்து ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

“அய்யோ இல்லப்பா.. நான் இதுல இல்ல” – பேரவைக்கு கருப்பு உடையில் வந்தது ஏன்? வானதி விளக்கம்!

ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘உலகிலேயே ஜனநாயகத்தை பறைசாற்றும் நாடாக இருக்கும் இந்தியாவிலேயே இப்படியொரு ஜனநாயக விரோத செயல் நடந்திருப்பது வெட்கக்கேடானது’ என்றெல்லாம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி வருகிறார்கள். மேலும் இதற்கு தீர்க்கமான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது திமுக உள்ளிட்ட … Read more

ராகுல் கொண்டு வந்த சட்டம் அவருக்கே பாதிப்பை தந்தது-திருச்சியில் டிடிவி தினகரன்

ராகுல் கொண்டு வந்த சட்டம் அவருக்கே பாதிப்பை தந்தது-திருச்சியில் டிடிவி தினகரன் Source link

மாற்றி மாற்றி பேசுவது திமுக அமைச்சருக்கு அழகல்ல! ஆதாரத்துடன் அடித்து நொறுக்கும் சங்கம்! 

“சட்டப்பேரவையில் ஒரு புள்ளி விபரம், பொதுவெளியில் வேறொரு புள்ளி விவரங்களை பதிவு செய்வது அமைச்சருக்கு அழகல்ல.” என்று, பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2011-2021 பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 24லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 41லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 30லட்சம் … Read more

புதுச்சேரியில் பதற்றம்..!! பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை..!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் செந்தில்குமார் (வயது 46). பாஜக பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். இவர் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு 9 பேர் கொண்ட … Read more

நலத்திட்ட உதவி வழங்குவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..! பொதுமக்களிடம் பணம் வசூலித்த தம்பதியர் கைது

ராணிப்பேட்டையில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருள் அடங்கிய நலதிட்ட உதவிகளை வழங்குவதாகக் கூறி 600-க்கும் மேற்பட்டவர்களிடம் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த சீனிவாசன் பேட்டையில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஏழை எளிய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்கள் அடங்கிய நல திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் பொருட்கள் குறைவாக இருப்பதாக … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை: இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்; அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் … Read more