ரூ.7,092 கூடுதல் கட்டணம் | தமிழக அரசின் மறைமுக கட்டண வசூலா?! 

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதே சமயத்தில், தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவிகிதம் உயர்த்தியிருப்பதன் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்ட தமிழக அரசு திரட்டமிட்டு இருப்பதாக வி.கே சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இதுகுறித்த தகவல்களின் அடிப்படையில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு சதுர அடி ரூ.666ஆக இருந்த … Read more

விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி வழக்கில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பற்களை மிஷின் மூலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் பிடுங்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணை நடத்த நெல்லை ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். Source link

அறிவியல் மூலம் நிரூபிக்கத்தக்க ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழினமுமே: அன்பில் மகேஷ்

மதுரை: அறிவியல் மூலம் நிரூபிக்கக்கூடிய ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழினமும்தான் என இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்க கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித்தார். நூலகத்துறை பொது இயக்குநர் இளம் பகவத் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி … Read more

ஜாக்கிரதை… ஊறவைத்த அரிசை சாப்பிடக்கூடாது… 8 வயது சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (50).  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மனைவி பரமேஸ்வரி. மாரிசாமி – பரமேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி. இவர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் நிகிதா லட்சுமி (8), அங்குள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.   … Read more

இன்ஸ்டா 'நாடக காதலி'யின் லீலைகள் | அழகில் மயங்கி நடுத்தெருவுக்கு வந்த அப்பாவி மும்பை தமிழன்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, செம்பூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மகன் ராஜேஷ் என்பவர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். அவரின் அந்த புகார் மனுவில், எனது இன்ஸ்டாகிராம் தோழி லோரன் மூலம் அவரின் சகோதரி ஹசல் ஜேம்ஸ் அறிமுகமானார். அவர் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி என்னை காதலித்து ஏமாற்றி உள்ளார். மேலும், அசல் ஜேம்ஸ் ஒரு கட்டத்தில் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் கஷ்டப்படுவதாகவும் பேசி, … Read more

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலில் 15 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அதனையொட்டி முதல்நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேதமாய் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். … Read more

1 முதல் 3ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு‘எண்ணும் எழுத்தும்’பயிற்சி முகாம் அறிவிப்பு

நெல்லை: கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புதிய கல்வியாண்டிற்காக 1 முதல் 3ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து நடக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்க நிலையில் பயிலும் மாணவர்களுக்கு எளிமையாக கற்கும் வகையில் கற்பித்தல் முறை பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவால் 2 ஆண்டுகள் மாணவர்கள் நேரடி கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், மாணவர்களின் கல்வி ஆர்வத்தை சீர்படுத்த 2022-23ம் … Read more

”என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க”-பிக்பாஸ் பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்!

தன்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது, ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார். அவருடைய … Read more