உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் அற்புத பழம்!!

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பித்தம் போக்கும் குணநலன், இளநிலையை சரிசெய்வது போன்ற அற்புத குணநலன்கள் கொண்ட பழம் குறித்து தெரியுமா? இனிப்புடன் புளிப்பு சுவை கலந்த விளாம்பழம்தான் அது. தமிழர்களின் உணவுகளில் அன்று முதல் இன்று வரை விளாம்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. நாம் தினசரி ஒரு விளாம்பழம் வீதம் தொடர்ந்து 21 நாட்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எந்த விதமான வியாதிகளும் நம்மை அண்டாது. அத்தனை அற்புத … Read more

“போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் சாலை விபத்துகளை தவிர்க்கலாம்”-கோவை மாநகர காவல் ஆணையர்

பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துகளை தவிர்க்க இயலும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உலகளவில் ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீத மக்கள் சாலை விபத்துகளில் தலையில் காயம் ஏற்படுவதால் உயிரிழப்பதாக கூறப்படும் நிலையில்,கோவையில் தலைக்காயம் பற்றிய விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாக்கத்தானை தொடங்கி வைத்த பின், கோவை காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். Source link

ஹிட்லர், முசோலினி செய்ததையே மோடியும் செய்கிறார் – கே.எஸ்.அழகிரி கண்டனம் 

சிதம்பரம்: “தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடமாட்டேன் என்று சொல்வது என்ன ஜனநாயகம்? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இதைத்தான் செய்தனர். இன்றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு … Read more

தெளிவா சொல்றேன்… 'மாண்புமிகு பிரதமர் ஸ்டாலின்'.. எச்.ராஜா தடுமாற்றம்..!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் அதிகமாக பேசுபொருளாகுவது எச். ராஜாவின் பேச்சுக்கள்தான். அவர் என்ன பேசினாலும் நெட்டிசன்களுக்கு கண்டெண்டாகிவிடுவது வழக்கம். சில நேரங்களில் எச். ராஜா எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினாலும் ரசிக்கும்படியாகத்தான் அது இருக்கும். மேலும் அவர் அவதூறாக பேசும் விஷயங்களைக்கூட பெரிதாக சில கட்சிகள் எடுத்துக்கொள்ளாது. பல தலைவர்கள் எச். ராஜாவுக்கு எதிர்வினைக்கூட ஆற்றுவதில்லை. ஆவேசமாக பேசும் சீமான்கூட எச். ராஜா விஷயத்தில் சிரித்துக்கொண்டேதான் பதில் அளித்து செல்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு … Read more

நீலகிரி: கட்டுகட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்! வருவாய்த்துறை அதிரடி சோதனை

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காட்டேரி பூங்கா பகுதியில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக வாகனங்கள் ஊட்டி நோக்கிச் செல்லும் என்பதால் குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர்.  அப்போது, திருப்பூரில் இருந்து உதகை நோக்கி வந்த டாடா இண்டிகா காரை … Read more

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் ஸ்ரீராமசமுத்திரம் காவேரி நகரை சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன்(25). டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் தர்மபுரி மாவட்டம் நல்லப்பட்டியை சேர்ந்த முனிராஜ் மகள் மோனிகா(20) என்பவரை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்தார். இருவரும் காட்டுப்புத்தூர் தவிட்டுப்பாளையம் காலனியில் வாடகை வீட்டில் வசித்தனர். 2 மாத கர்ப்பிணியான மோனிகா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் மோனிகாவின் பெற்றோர் புகார் … Read more

இன்று முதல் நெல்லை – தாம்பரம்  ஸ்பெஷல் ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு  

இன்று முதல் நெல்லை – தாம்பரம்  ஸ்பெஷல் ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு   Source link

மதுரை : காலி இடத்திற்கு போலி பட்டா வழங்கிய தாசில்தார் கைது.!

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர் கோபிலால். இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹிர் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தை விலைக்கு வாங்கி வீடுகட்டியுள்ளார். ஆனால் அந்த இடம் ஏற்கனவே ராமன் என்ற பெயரில் பட்டா வாங்கி வேறு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த கோபிலாலு மதுரை நகர் நில அபகரிப்பு பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு … Read more

அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்.. 10 மணி நேரத்தில் மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீசார்..!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர். செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி என்பவரின் மனைவி சத்யாவுக்கு 19ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், நேற்று இவரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். அப்போது, மூன்று நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித் திரிந்த பாண்டியம்மாள் என்பவர், லிப்டில் சென்றால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது எனவே நான் படி வழியாக தூக்கி வருகிறேன் … Read more

மேயர் உள்ளிட்டோரின் எதிர்ப்பு எதிரொலி | விருப்ப மாறுதலில் சென்ற சிவகாசி மாநகராட்சி ஆணையர்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நிலவி வரும் தொடர் சர்ச்சை காரணமாகவும், திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாகவும் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி விருப்ப மாறுதலில் கடலூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி பொறுப்புகளை நகராட்சியில் பணியாற்றிய அலுவலர்களே கூடுதலாக கவனித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more