நிர்வாகிகள் மீது அதிருப்தி: பாஜகவில் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

சேலம்: கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் பாஜகவில் இருந்து விலகுவதாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி பல்வேறு கட்சிகளுக்கு இணைவதும், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த குட்டி என்கிற சோலை குமரன், சேலம் மாவட்டத்தில் பாஜக செயல்படவில்லை என்றும் உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை மற்றும் … Read more

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தி; கொதித்தெழுந்த சு.வெங்கடேசன்.!

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் “உடல் நலம் ” பற்றிய ஒரு வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, மகிழ்ச்சி. ஆனால் அக்கூட்டத்தில் 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக அந்த சுற்றறிக்கை கூறுகிறது. ” உடல் நலம்” போன்றே “தேச நலம்” கருத்தில் கொண்டு அங்கு அலுவல் மொழி விதிகளை அங்கு விவரித்து இருக்கலாம். … Read more

TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியானது? யார் முதலிடம்? எப்படி பார்ப்பது?

TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட் வெளியீடு; முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி? அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப் 4 தேர்வுகளை  எழுதினார்கள். அண்மையில் தமிழ்நாடு அரசு, குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்களை … Read more

மதுரை ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் உள்ள எக்கோ பார்க், ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நிலை அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முறையாக பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த பொழிலன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

'வசதி படைத்தோருக்கெல்லாம் ரூ.1000 உரிமை தொகை வழங்க முடியுமா?' – அமைச்சர் எ.வ. வேலு பதிலடி

ரேஷன் அட்டை இருக்கிறது என்பதற்காக வசதி படைத்தோருக்கெல்லாம் ரூ.1000 உரிமை தொகை வழங்க முடியாது என அமைச்சர் எ.வ. வேலு  தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது, தேர்தல் அறிக்கையிலே அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் கொடுப்போம் என கூறுவது ஏன்  என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய … Read more

ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் – தங்கை: சிறப்பு நேர்காணல்

ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் – தங்கை: சிறப்பு நேர்காணல் Source link

சட்டம் அனைவருக்கும் சமம்! ராகுல்காந்தி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து!

குறிப்பிட்ட சமூகத்தை திருடர்கள் என்று அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்க்கு நாடும் முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் ராகுல்காந்தி சத்திய வன்மத்தோடு பேசியதால் தான், அதற்கான தண்டனை அவருக்கு கிடைத்துள்ளது என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டம் அனைவருக்கும் சமம் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமானது 18,000 ரூபாயாக உள்ள நிலையில், அதனை 26,000 ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதே போல், 38 சதவீதமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபடி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. எனவே அகவிலைப்படி 42 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுதோறும் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். அந்த … Read more

“கே.எஸ். அழகிரியின் பின்னால் 3 பேர் மட்டுமே நின்றுகொண்டு ரயில் வராத தண்டவாளத்தில் போராட்டம்..” – அண்ணாமலை..!

காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தில் கூட 5 விரல்கள் இருக்கின்றன என்றும் ஆனால் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரியின் பின்னால் 3 பேர் மட்டுமே நின்றுகொண்டு ரயில் வராத தண்டவாளத்தில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். பா.ஜ.க ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்ற முதலமைச்சரின் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, சமூக வலைதளங்களில் … Read more

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

கும்பகோணம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கழுத்தில் பதாகை அணிந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் கும்பகோணத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வாழ்வாதார உரிமை மீட்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜாக்டோ ஜியோ தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில் ஜாக்டோ ஜியோ கும்பகேணம் பகுதி பொறுப்பாளர்கள் ராஜா, அறிவுடைநம்பி, கலைச்செல்வன், விஜயக்குமார், சாமிநாதன் மற்றும் கும்பகோணம், திருவிடைமருதூர், … Read more