பரபரப்பு! முன்னாள் முதலமைச்சர் வீட்டில் கல்வீசி தாக்குதல்!!

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.கவும், காங்கிரஸும் இரண்டு பிரதான கட்சிகள். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கி, இடஒதுக்கீட்டில் சிற மாற்றங்களைச் செய்தது. அதேபோல, பட்டியலின மக்களுக்கான … Read more

1000 ரூபாய் உரிமைத் தொகை யார்-யாருக்கு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாட்டில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்  ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுகுறித்து பதில் அளித்து பேசிய அவர், இத்திட்டத்தால் மீனவ பெண்கள், கட்டுமான பெண் தொழிலாளர்கள், நடைபாதை வணிக பெண்கள், வீடுகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவார்கள் என்றார். இத்திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை  நேரடியாக செலுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். … Read more

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அரிசி, சர்க்கரை வழங்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வெள்ளை அரிசி, சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்கள் விநியோகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: “புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வின்போது அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பலக்கட்ட போராட்டங்களை நடத்துவது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான். இதன்மூலம் கடந்த காலங்களில் … Read more

திமுகவிற்குள் ஊடுருவும் ஆர்எஸ்எஸ்.! – அமைச்சர் அன்பில் மகேஷ் டார்கெட்.?

தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்து திமுகவிற்குள் ஆர்எஸ்எஸ் நபர்கள் ஊடுருவுவதாக அரசியல் நோக்கர்களும், திராவிட ஆதராவாளர்களும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் போலீஸ் உள்ளதா, அல்லது ஆர்எஸ்எஸ் நபர்களால் தமிழ்நாடு காவல்துறை இயங்குகிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சமீப காலமாக கேள்வி எழுப்பி வருகிறார். அந்தவகையில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்களை தொகுக்கும் அரசியல் நோக்கர்கள், திமுகவிற்குள் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் உள்ளதாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். சம்பவம் 1 சிலநாட்களுக்கு … Read more

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இன்று காலை பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தேவசம் தந்தரி சஜித் சங்கர நாராயணரு கொடி ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் தேவசம் கணகாணிப்பாளர் சிவகுமார், கோயில் மேலாளர் … Read more

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக … Read more

புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் படுகொலை வழக்கு: 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் படுகொலை வழக்கு: 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் Source link

ஈரோடு : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்.!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரச்சலூர் ஜேகே நகரை சேர்ந்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.  அப்போது குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் ஓடி வந்து  அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவரை ஓரமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெரிவித்ததாவது:- … Read more

மாத சம்பளம் வாங்குவோர் தலையில் விழுந்த இடி!!

அதானி நிறுவனத்தால் மாத சம்பளம் வாங்குவோர் தலையில் இடி விழுந்துள்ளது. அதானியின் நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனத்தின் முதலீடு செய்த முதலீட்டு தொகையை விட எல்ஐசிக்கு அதிக நஷ்டம் … Read more

சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்த நிலையில், எதேச்சையாக தானும் கருப்பு உடையுடன் வந்த வானதி சீனிவாசன்…!

ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு உடையுடன் வந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கருப்பு புடவையுடன் வந்தது பேசுபொருளானது. சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்டோர் வானதியின் கருப்பு உடை குறித்து கேள்வி எழுப்ப, சிரித்துக் கொண்டே அவர்களை கடந்து சென்றார். சட்டப்பேரவை விவாத நேரத்தில் “காங்கிரஸ்காரர்கள்தான் யூனிஃபார்பில் வந்திருக்கிறார்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்திருப்பதுபோல் தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி … Read more