அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை… சிகிச்சை பெற வந்தவர்கள் செவிலியரால் அலைக்கழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்த 2 பேர் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். விபத்தில் சிக்கிய சரவணகுமார், அருண்குமார் ஆகிய இருவரை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு போதிய மருத்துவர், செவிலியர் இல்லாததால் ஒரு மணிநேரத்துக்கும் மேல் சிகிச்சை அளிக்காமல், ஆம்புலன்சுக்கும் ஏற்பாடு செய்யாமல் அவர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்,செவிலியர் நியமிக்க வேண்டும் என அப்பகுதி சமூக … Read more

சென்னையில் விரைவில் நடைமுறைக்கு வருகிறது பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே இ-டிக்கெட் வசதி

சென்னை: சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானதாகும். இங்கு மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமும், அலைச்சலும், பயணத்தில் சிரமமும் ஏற்படுவதை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி, அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயணிக்கலாம. இந்தியாவில் டெல்லி, மும்பை … Read more

பாஜக ஒரு கட்சியே இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவளத்தில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழகினார்.  சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி படைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இறுதி போட்டியை துவக்கி வைத்தார்.  பின்னர் … Read more

அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி சசிகலா கூறியதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன்: ஓபிஎஸ் பேட்டி

குத்தாலம்: மயிலாடுதுறை  மாவட்டம், குத்தாலத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: அதிமுகவினர்  அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று  சசிகலா கூறியதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும்  ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம். சாதாரண தொண்டர்கள் கூட பதவிக்கு  போட்டியிடலாம். ஆனால் அவர்கள் 10 மாவட்ட செயலாளர்  முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு  போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதைத்தான்  கூடாது என்கிறோம். கட்சி சட்ட … Read more

ஈரோடு: 2 வயது குட்டியானை உட்பட அடுத்தடுத்து 3 யானைகள் வனப்பகுதியில் பலியான சோகம்!

சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துக்குச் செல்லும் சாலையோரத்தில் சுமார் 30 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மேலும், வனக் … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி.?

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது  இந்த நிலையில் பத்தாம் வகுப்பு … Read more

கணவனே மனைவியின் ஆபாச வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றிய கொடூரம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த சுமார் 32 மதிக்கத்தக்க பெண் ஒருவரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது முன்னாள் கணவர் இணையத்தில் பதிவேற்றம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அப்பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் மனு ஒன்றை அளித்தார். இப்புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் … Read more

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3வது வார பூச்சொரிதல் விழா: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அம்மனுக்கு பூச்சாற்றி வழிபாடு!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 3வது வார பூச்சொரிதல் விழாவில் மாவட்ட காவல்துறை சார்பில் டிஐஜி, எஸ் பி உள்ளிட்ட 300 காவல்துறையினர் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாற்றினர். யானை, குதிரை ஊர்வலத்துடன் தட்டுகளில் பூக்களை ஏந்தி, தேரோடும் வீதியில் ஊர்வலமாக காவல்துறையினர் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சாற்றி வழிபட்டனர். Source link

ராகுல் காந்தி தகுதி இழப்புக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் – தமிழகத்தில் 70 இடங்களில் நடந்தது

புதுடெல்லி: எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்.பி பதவியில் இருந்து, ராகுல்காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸார் … Read more