#கோயம்பேடு மார்க்கெட்.! (05.04.2023)இன்றைய காய்கறி விலைபட்டியல்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 05/04/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 18/16/15 ஆந்திரா வெங்காயம் 12 நவீன் தக்காளி 18 நாட்டு தக்காளி 12/10 உருளை 20/15/10 சின்ன வெங்காயம் 50/45/30 ஊட்டி கேரட் 35/30/20 பெங்களூர் கேரட் 12 பீன்ஸ் 100/90 பீட்ரூட். ஊட்டி 27/28 கர்நாடக பீட்ரூட் 15/12 சவ் சவ் 20/15 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 25/20 … Read more

அதிர்ச்சி! உதவி ஆட்சியரை கடித்து குதறிய நாய்கள்!!

உதவி ஆட்சியரைத் தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் சீனிவாச ரெட்டி என்பவர் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்று காரில் இருந்து இறங்கி தனது அறைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில தெருநாய்கள் அவரை சுற்றிவளைத்து கடித்தன. இதில் உதவி ஆட்சியர் சீனவாச ரெட்டிக்குக் இரண்டு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த உதவியாளர்கள் தெருநாய்களை விரட்டி உதவி ஆட்சியரை மீட்டு அருகே … Read more

உங்க கணவர் தரங்கெட்டவரு.. தலைமை ஆசிரியையை போனில் மிரட்டிய பெண் கல்வி அலுவலர்..! தவறு செய்து விட்டு தம் கட்டலாமா.?

திருப்பூரில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மாணவனின் தந்தை மீது போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி மாவட்ட கல்வி அலுவலர் மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேயூரை சேர்ந்தவர் அருள்செல்வன். கட்டட பொறியளராக உள்ளார். இவரது மனைவி மல்லிகா அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியராக உள்ளார். இவர்களது மகன் கதிரவன் பஞ்சலிங்கம்பாளையம் … Read more

சொந்த காரணங்களுக்காக வாய்ப்பை வீணடிக்கக் கூடாது: மருத்துவ மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை

சென்னை: முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையை சொந்த காரணங்களுக்காக வீணடிக்கக் கூடாது என மருத்துவ மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவரான ஆஷ்ரிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்படி மருத்துவக் கல்லூரியில் உரிய கட்டணங்களையும், அசல் சான்றிதழ்களையும் ஒப்படைத்து கடந்த 2019 மே 1-ம் தேதி சேர்ந்த மருத்துவர் ஆஷ்ரிதா, இரண்டே நாட்களில் மே 3-ம் தேதி தனது திருமணத்தைக் காரணம் … Read more

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கமா? டிஆர்பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் – உதயநிதி தகவல்!

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று சட்டமன்றத்தில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் பகுதிகளில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். … Read more

ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொடங்கப்படும் – உதயநிதி ஸ்டாலின்!

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் கலைஞர் அறிவாலயத்தில் மாநில திமுக இளைஞரணி சார்பில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது, இந்த நேர்காணலில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து அவர்களின் கட்சிப் பணி குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் கேட்டறிந்தனர்.  முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது இளைஞர் … Read more

அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்குகிறது..!!

அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. இதற்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை இன்று முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படும். புதிய உறுப்பினர்களையும் பெருமளவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, … Read more

மருமகளை கத்தியால் குத்திய கஞ்சா குடிக்கி இளைஞரை விரட்டிப் பிடித்த வீர மாமியார்..! கஞ்சாவால் இது 3-வது சம்பவம்

சேலத்தில் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த மருமகளை கத்தியால் குத்திவிட்டு, துரத்தி வந்த கஞ்சா குடிக்கி இளைஞர் மீது பொருட்களை வீசியும், தண்ணீரை ஊற்றியும், மாமியார் விரட்டி அடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை லீ பஜார் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மதன்குமார். இவரது மனைவி மைதிலி. இவர் திங்கட்கிழமை இரவு கடைக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கிச்சிப்பாளையம் … Read more

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.5) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்திய பகுதிகளின் மேல்வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஏப்.5) இடியுடன் கூடிய … Read more