கோடை காலம் தொடங்கியதால் விற்பனை தீவிரம்; தொற்று நோய் ஏற்படுத்தும் தரமற்ற ஐஸ் கட்டிகள்: சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
வேலூர்: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் சாலையோரம் புதிதாக பழச்சாறு, ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமானதுதான என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உருவாகும் குளிர்பானம், பழச்சாறு, சர்பத் போன்றவற்றை … Read more