நிலக்கரி ஏல ஒப்பந்த அறிவிப்பில் டெல்டா பகுதிகளை நீக்குக: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தின் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டாப் பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பாக சமீபத்திய ஏல அறிவிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சனையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2005, … Read more

வீடு மாறும் உதயநிதி: அப்பாவுடன் இருப்பதில் என்ன பிரச்சினை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இங்கு தான் அமைச்சரும் முதல்வரின் மகனுமான தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். முதலமைச்சரான உடன் அரசு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தங்குவார், அல்லது அது அவரது முகாம் அலுவலகமாக செயல்படும் என கூறப்பட்டது. ஆனால் அவர் தனது இல்லத்தில் ஒரு பகுதியையே முகாம் அலுவலகமாக மாற்றி அங்கேயே முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறார். டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் … Read more

கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்: தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது என திண்டுக்கல்லில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரல் தொற்று குறித்தும் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியது குறித்து பார்ப்போம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ119.6 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய  கட்டிடத்தை … Read more

கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை: காரைக்கால் ஆட்சியர்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவுமில்லை எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் கூறியுள்ளார். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது கடந்த 1-ம் தேதி கண்டறியப்பட்டது. 2-ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் பொது இடங்களில் … Read more

தஞ்சை வேளான் நிலங்களில் நிலக்கரி ஆய்வு… 'என்னை மீறி நடத்தினால்'… சீமான் கொந்தளிப்பு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர் அறிவிக்கப்பட்ட பின்னரும் நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் புதிதாக நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதமாகும். குறிப்பாகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டப் பின்னரும் இந்த அவல நிலை தொடர்வது ஒன்றிய அரசின் தமிழர் விரோதப் போக்கினைக் … Read more

ராமநாதபுரம்: கூண்டோடு அதிமுகவில் இணைந்த அமமுகவினர்…!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றவுடன் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மாற்றுக் கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்கின்றனர். அமமுகவினர் பொறுத்தவரை அதிமுக இப்போது ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்க தொடங்கிவிட்டத்தால், … Read more

#BREAKING | டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடித்தம் எழுதியுள்ளார். இவ்விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடும் முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறவில்லை; மாநில அரசிடம் கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை; மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டி காட்டியுள்ளார். Source link

பிரதமருக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்…!

இந்திய ரயில்வேயில் 60 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள ஆண்கள் டிக்கெட் விலையில் 40 சதவீத சலுகையும், 58 வயது மற்றும் அதற்கு மேலே உள்ள பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சலுகையை நிறுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ரயில்வேயில் முதியோர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்துவதன் மூலம் மத்திய … Read more

ஸ்ரீபெரும்புதூரில் 2 ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒரு துணைத் தலைவரின் அதிகாரம் பறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவரின் அதிகாரங்களை நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிசிடிவி கேமரா பொறுத்துவதில் முறைகேடு மற்றும் சிறிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது உள்ளிட்ட புகாரில் மாத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கோபி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரமூர்த்தி வீடுகட்டுவதற்கு அனுமதி வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் … Read more

புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்வு: இம்மாதம் முதல் அமல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்து மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து இருந்தது. இது தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து மின் துறையின் கணக்கு வழக்குகளை ஆராயந்த மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஒரு … Read more