இன்புளூயன்சா வைரஸ் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 26ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: புதுச்சேரியில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகளவில்  பாதிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. எனவே புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள ஆரம்பப் பள்ளி முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு, நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும், இன்று (16ம்தேதி) முதல் வரும் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்றார்.

சேலத்தில் வலம் வந்த அல்டிமேட் ஸ்டார்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்ட்டிமேட்ஸ்டார் அஜித் குமார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், வலிமை, பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதற்கிடையே நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பு இடைவெளியின் போது தனது இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்துக்கொண்டு  பல்வேறு பகுதிகளுக்கு தனது உயர் ரக இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறார்.  இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நேற்று சேலத்திலிருந்து கோவை செல்லும் … Read more

பெட்ரோல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் பெட்ரோல் குண்டுவீசி கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பணியின்போது பாதுகாப்பை உருவாக்க கோரி சிவகங்கை முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் ஊழியர் படுகொலையைக் கண்டித்து, விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மணி நேரம் தாமதமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. Source link

திருச்சியில் திமுகவினர் இடையே மோதல்: அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

சென்னை: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில், திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கட்சியின் … Read more

பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாப பலி

காரைக்குடி: காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த விற்பனையாளர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2ம் இரவு 9.50 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் அர்ச்சுனன்(45) பலத்த தீக்காயமடைந்தார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

தமிழ்நாட்டில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..

தமிழ்நாட்டில், திருச்சி, சேலம், நாகை, தருமபுரி மற்றும் தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். புகாரின் பேரில் ஆவடி, அரக்கோணம் உட்பட பல இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆத்தூர், நாகை உட்பட பல இடங்களில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், இராமநாதபுரத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், கடலூரில் மாநகராட்சி அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை தொடர்கிறது. அதிகாரிகள் லஞ்சம் … Read more

திமுக உட்கட்சிப் பூசலால் திருச்சியில் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு: தினகரன் சாடல்

சென்னை: “திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீயசக்தி திமுகவின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் திமுக … Read more

வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை மோசடி நபர்களுக்கே கடன்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: ‘திருப்பி செலுத்துவோருக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. மோசடி நபர்களுக்கே கடன் வழங்கப்படுகிறது’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், வங்கி கடன் தொடர்பான பல வழக்குகளை நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், வங்கி கடனை முறையாக செலுத்துவோர் கடன் கேட்டால் கொடுப்பதில்லை. மாறாக மோசடி செய்யும் நபர்களுக்கு அதிகளவில் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கி மேலாளர்கள் இவர்களுடன் கூட்டு சேர்கின்றனர். பல வங்கிகள் நியாயமான  … Read more