15 மாதங்களில் இது ஆறாவது முறை! தமிழ்நாடு அரசுக்கு அந்த கடமை இல்லையா? – அன்புமணி இராமதாஸ் வினா!
3 மாதங்களில் இரண்டாவது உயர்வு; தொடர்கதையாகும் பால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் கடமை தமிழ்நாடு அரசுக்கு இல்லையா? என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் தனியார் பால்விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2 வீதமும், தயிர் விலை ரூ.8 வீதமும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 15 மாதங்களில் இது ஆறாவது விலை உயர்வு. கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது உயர்வு. ஏழைகளை கசக்கிப் பிழியும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. … Read more