திருச்சி மாத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. 22 மாணவ, மாணவிகள் காயம்!

திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த கேந்திர வித்யாலயா பள்ளி வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதிலிருந்த 22 பேர் காயமடைந்தனர். குறுகலான சாலையில் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ள நிலையில், வேன் டிரைவர் பக்ருதீன் என்பவர் விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

கோயில் திருவிழாவில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை – நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது-22), பானேஷ் … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள 101 ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமனம் செய்துவைக்கப்பட்டது.  பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறைவேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல முன்னுதாரண நிகழ்வாக இருந்தது. பசுமை  தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சராரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, டபிள்யூ. வி.கனெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தட்சிணாமூர்த்தி, இயக்குனர் நந்தினி … Read more

அதுக்குன்னு இப்படியா அசிங்கப்படுத்துறது? முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் அதிர்ச்சி பேட்டி!

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தாவது, “சமூகநீதி பற்றி பேசுவதற்கு, அருகதை, தகுதி என்பதைவிட, அதற்கு ஒரு முகாந்திரம் வேண்டும்.  எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் சமூக நீதி மாநாடு நடத்தியதாக திமுகவினர் கூறிக் கொள்கின்றனர். அந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களா கலந்து கொண்டார்கள்? ஏதோ ஊர், பெயர் தெரியாதவர்கள் தான், இந்த நிகழ்ச்சிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்கள். எல்லாம் ஒரு பில்டப். அந்த பில்டப் எல்லாம் … Read more

சட்டம் அனைவருக்கும் சமம் என்று நிரூபித்த பூனே போலீசார்…!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக கடந்த இரண்டு வாரங்களில் 392 காவல்துறை வாகனங்கள், 160 அரசு வாகனங்கள் மற்றும் 35 ஆயுதப்படை வாகனங்களுக்கு புனே போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். முறையாக பார்க்கிங் செய்யமால் இருந்ததற்கும், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியதற்கும், தவறான திசையில் வாகனத்தை ஒட்டி வந்த அரசு மற்றும் காவல்துறை வாகனங்களை புனே நகர பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளைங்களில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த துரித நடவடிக்கை புனே நகர போக்குவரத்து போலீசாரால் நடவடிக்கை … Read more

குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் உள்ள குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன், விக்னேஷ் சிவனின் குல தெய்வம் என சொல்லப்படுகிறது. இன்று காலை கோயிலுக்கு வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, தெய்வங்களுக்கு தீபம் காண்பித்து வழிபட்டனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தபோது அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இடையூறு செய்த நிலையில், சாமி கும்பிடும் வரை அமைதி காக்கும் படி … Read more

நங்கநல்லூர் கோயில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 5 பேர் பலியானது எப்படி?- அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்

சென்னை: சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின்போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் ஒருவர் மட்டுமே ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது அருகில் … Read more

நானும் டெல்டாக்காரன் தான்… அப்டிலாம் விட்ற மாட்டேன்… போன் போட்ட டி.ஆர்.பாலு, அடிச்சு சொன்ன ஸ்டாலின்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏலம் எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சி எம்.எல்.ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். பின்னர் பேசிய முதல்வர் , டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பிரதமருக்கு கடிதம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் பேசினேன். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். … Read more

நிலக்கரி சுரங்க திட்டத்தை தடுத்து நிறுத்த வதற்கான நடவடிக்கைகளை தேவை- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் மத்திய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களுக்கான அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் இன்று தமிழக சட்டசபையிலும் ஒலித்தது. இதனையடுத்து மத்திய அரசின் அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது … Read more

நானும் டெல்டா காரன் தான்., முதல்வர் ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த சட்டப்பேரவை!

தஞ்சாவூர் : ‘வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம்’ கடலூர் : ‘சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம்’ என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.  மேலும், அரியலூர் : ‘மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம்’ என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், … Read more