சசிகலா உடன் சந்திப்பு எப்போது? மதுரையில் அடுத்த திட்டத்தை உடைத்த ஓபிஎஸ்!

அதிமுகவில் , இடையிலான அதிகார மோதலில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 11, 2022ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிடப்பட்டதால் எடப்பாடியின் கை ஓங்கியது. அதேசமயம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நீதிமன்ற வழக்குகள் இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பாயிண்டை வைத்து கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தை … Read more

வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக … Read more

கோவையில் பயங்கரம்.! கழுத்தை நெரித்து மனைவி கொலை.! நாடகமாடிய கணவர் கைது.!

கோவை மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துப்புரவு தொழிலாளி அனிதா (42). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அனிதாவின் கணவர் பிரிந்து சென்று விட்டதால், சிங்கநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளியான சின்னதுரை (48) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக … Read more

நாளை காலை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம்..!!

நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி. ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு 42 ரூபாயும் எருமை பாலுக்கு 51 ரூபாயுமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வரும் நிலையில்,நாளை முதல் திட்டமிட்டப்படி பால் … Read more

பெத்தநாயக்கன்பாளையம் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னகல்வராயன் மலை கிராமத்தில் இடி, மின்னலுடன் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள சின்னகல்வராயன் மலைப்பகுதியில் வியாழக்கிழமை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்தது. இந்நிலையில், மழையின்போது சின்னகல்வராயன் மலையில் உள்ள கீழ்நாடு கிராமம் அருணா என்ற பகுதியைச் சேர்ந்த குழந்தையன் (48) என்ற விவசாயியை மின்னல் தாக்கியது. அதில் சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து, பெத்தநாயக்கன்பாளையம் … Read more

‘2006 திமுக ஆட்சியில் மதுரை போக பயந்த ஸ்டாலின்..!’ – கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி.!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு முறையான ஆட்சி நடைபெற்றது; மக்கள் சுதந்திரமாக நடமாடினர். 2006 முதல் 2011 வரை தமிழகத்தை ஆட்சி செய்த காலத்திலேயே, மதுரைக்கு சுதந்திரமாக போகக்கூட இயலாத நிலையில் இருந்த தற்போதைய முதலமைச்சர், 2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான் மதுரை மண்ணை … Read more

தஞ்சை அருகே திருமணமான 2 நாளில் கர்ப்பிணி தூக்கில் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை மணல்மேட்டை சேர்ந்தவர் விஜயமூர்த்தி. இவர் தனது மாமன் அண்ணாதுரையின் மகளான சரண்யாவை(21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். நெருக்கமாக பழகியதால், சரண்யா 5 மாத கர்ப்பிணியானார். இதையறிந்த இருவீட்டாரின் பெற்றோர் கடந்த 13ம் தேதி, அன்பில் மாரியம்மன் கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து, சரண்யாவை விஜயமூர்த்தியின் வீட்டில் விட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சரண்யா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் சேலையில் … Read more

”அந்த 3 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்” – அக்னிக்கு முன்பே வாட்டும் வெயில்!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி தெலுங்கானாவில் அனைத்துப் பள்ளிகளும் ஏப்ரல் 24 வரை அரைநாள் மட்டுமே செயல்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை … Read more

தி.மு.க.வினர் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் வைக்க தடை : எஸ்.ஆர்.பாரதி அறிவிப்பு

தி.மு.க.வினர் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் வைக்க தடை : எஸ்.ஆர்.பாரதி அறிவிப்பு Source link