திருவண்ணாமலை அருகே காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே கோளாப்பாடி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்த லாரி திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூர் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

"கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" – ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேட்டி

வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு.. வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு … Read more

தேனி இளைஞர்களே தயாரா… இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!

தேனி மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.  கல்வி தகுதி: •10-ம் … Read more

பட்டப்பகலில் தனியாக வாக்கிங் சென்ற பேராசிரியரை அடித்து தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இசிசி துறைத் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த 12-ம் தேதி மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார். இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் மிரட்டும் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததாக அதிர்ச்சி..! பொது பயன்பாட்டு கட்டணம் உயர்வு

தமிழகத்தில் மின்கட்டண சீரமைப்பை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுகான (common service) மின்கட்டணம் நான்கு மடங்கு வரை உயர்ந்த நிலையில் , கோடை காலம் தொடங்கியதால்  மின்கட்டணம் மேலும் உயரும் நிலை உருவாகியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் , பொதுப்பயன்பாட்டு மின் கட்டணம் , வணிக இணைப்புக் கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அபார்ட்மன்ட்களில் பயன்படுத்தப்படும் மோட்டார், … Read more

திருவண்ணாமலை | அரசு பேருந்து மோதியதில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை அடுத்த பெரியகல்லப்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் விக்னேஷ்(25). இவர் தனது தாய் சித்ரா(48) மற்றும் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் உறவினரான ராமலிங்கம் மனைவி இந்திராணி(55) ஆகியோரை அழைத்து கொண்டு வெறையூர் பகுதியில் இருந்து பெரியகல்லபாடிக்கு இருசக்கர வாகனத்தில் இன்று(16-ம் தேதி) … Read more

​ஒப்பந்த ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஊதிய நடைமுறை பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, … Read more

தாய்ப்பால் தொண்டையில் சிக்கி ஒரு மாத குழந்தை பலி: மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத் திணறி 28 நாள் மட்டுமே ஆன பிஞ்சுக் குழந்தை இறந்ததால் மனமுடைந்த தாய், மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பூப்பாறை பகுதியை சேர்ந்தவர் லிஜி (38). அவரது மகன் பென் டோம் (7). இந்தநிலையில் லிஜிக்கு கடந்த 28 நாளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. நேற்று காலை … Read more