மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தினசரி 5,900 மெகாவாட் மின்சாரம் வழங்கல்

சென்னை: மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் ஆகியவற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு தினமும் 7,192 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மின்நிலையங்களில் பழுது, பராமரிப்பு பணி உள்ளிட்டவை காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்படுவதால் தமிழகத்துக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை … Read more

மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கைகள்: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போல் மக்கள் நலப் பணியாளர் திட்டமும் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500க்கும் கூடுதலான … Read more

சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் – முழு விவரம்!

இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.    

வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு மீனவ இளைஞர் உயிரிழப்பு: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்

ராமேசுவரம்: பங்குனி உத்திரத் திருவிழாவின்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு மீனவ இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் சுனாமி காலனியைச் சேர்ந்த மீனவ இளைஞர்ரான முகேஷ் (24). கடந்த ஏப்ரல் 5 அன்று பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ராமநாதசுவாமி தெற்கு வாசல் அருகே சிலர் வழிமறிந்தது செல்போனை பறித்துக் கொண்டு தாக்குதல் நடத்தி … Read more

'ஐபிஎல் டிக்கெட் தாங்க'… 'சிஎஸ்கே-வை தடை செய்யுங்க'… குழம்பிய சட்டப்பேரவை..!

தமிழக சட்டசபையில் இன்று விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது, பேசிய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுகுறித்து பேசியவர், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎஸ் போட்டி தமிழக இளைஞர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற தமிழகத்தை சேர்ந்த அணியில் தமிழக வீரர்களே இல்லை. தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தாலும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரர்கூட தேர்வு … Read more

’கல்விட்டு எறியமாட்டோம் ஆனால்…’ஆளுநர் ஆர்என் ரவிக்கு துரைமுருகன் கடும் எச்சரிக்கை

Tamil Nadu Governor live update: அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளுநராக மட்டும் இல்லை… இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனி தீர்மானத்தின் மீது துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.     

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் பணியில் மாற்றம் ஏற்படுமா?

மதுரை; மெட்ரோ ரயில் திட்டத்தால் மதுரை கோரிப்பாளையத்தில் டெண்டர் விடப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணியில் மாற்றும் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை மாநகரில் பொதுமக்களுடைய விரைவான பொது போக்குவரத்திற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.1,850 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கான சாத்தியகூறுகள் ஆய்வுப்பணிகள் முடிந்து மத்திய, மாநில அரசுகளுடைய ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை தயார் பணிகள் தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் மதுரையில் மெட்ரோ ரயில் … Read more

ஐபிஎல் டிக்கெட் கேட்கவா உங்கள ஜெயிக்க வச்சோம்..? எஸ்பி வேலுமணிக்கு எழும் கண்டனங்கள்

இந்திய கிரிக்கெட் ஆணையத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் தமிழக ரசிகர்களின் ஆதரவு அளப்பரியது. அதுவும் தமிழக அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், சென்னை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இருப்பினும் இதுகுறித்து பெரிதாக பிரச்சினை எழுவதில்லை. சென்னை சார்பில் கேப்டன் ‘தோனி’ இருந்தாலே போதும் என்ற நிலை ரசிகர்களிடையே இருப்பதால் மொழி சார்ந்து யாரும் கவலையும் படுவதில்லை. முழுக்க முழுக்க … Read more

Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை

தமிழக அரசு எடுத்த தீர்க்கமான முடிவின் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அமலுக்கு வந்துள்ளது.