மக்கள் நலப்பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் நலப்பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 -ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நலப் பணியாளர்களின் நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அந்த … Read more

4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள்: தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பிய அறிக்கை!

பள்ளிகளில் 4,5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள்கள் குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எஸ்சிஇஆர்டி “மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5ஆம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான 3ஆம்பருவ தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள், அதற்கான விடைக்குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. … Read more

அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்? மாஃபா பாண்டியராஜன் சொன்ன அந்த நபர்!

அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் அமர்ந்தே ஆகவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.  

பிரதமர் மோடி நாளை 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் ..!!

படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி நாளை 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி ஆன்லைன் முறையில் அனைவருக்கும் பணி ஆணை வழங்க … Read more

மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தினசரி 5,900 மெகாவாட் மின்சாரம் வழங்கல்

சென்னை: மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் ஆகியவற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு தினமும் 7,192 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மின்நிலையங்களில் பழுது, பராமரிப்பு பணி உள்ளிட்டவை காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்படுவதால் தமிழகத்துக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை … Read more

மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கைகள்: அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போல் மக்கள் நலப் பணியாளர் திட்டமும் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500க்கும் கூடுதலான … Read more

சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் – முழு விவரம்!

இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.    

வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு மீனவ இளைஞர் உயிரிழப்பு: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்

ராமேசுவரம்: பங்குனி உத்திரத் திருவிழாவின்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு மீனவ இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் சுனாமி காலனியைச் சேர்ந்த மீனவ இளைஞர்ரான முகேஷ் (24). கடந்த ஏப்ரல் 5 அன்று பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ராமநாதசுவாமி தெற்கு வாசல் அருகே சிலர் வழிமறிந்தது செல்போனை பறித்துக் கொண்டு தாக்குதல் நடத்தி … Read more

'ஐபிஎல் டிக்கெட் தாங்க'… 'சிஎஸ்கே-வை தடை செய்யுங்க'… குழம்பிய சட்டப்பேரவை..!

தமிழக சட்டசபையில் இன்று விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது, பேசிய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுகுறித்து பேசியவர், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎஸ் போட்டி தமிழக இளைஞர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற தமிழகத்தை சேர்ந்த அணியில் தமிழக வீரர்களே இல்லை. தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தாலும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரர்கூட தேர்வு … Read more