சோகத்தில் திரையுலகம்..!! பரிதாபமான நிலையில் அஜித் பட இயக்குனர்..!!

அஜித்தின் நண்பரும் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு நேர்ந்த சோகத்தால் மொத்த திரைபிரபலங்களும் கவலையில் உள்ளது. நடிகர் அஜித்தின் ஆரம்பக்கால படங்கள் தோல்வியானதையடுத்து, இவரை வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். அந்த சமயத்தில் அஜித்தின் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு உள்ளிட்ட படங்களை தனது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு … Read more

அரசியலுக்காக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார்: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக வெளியிட்டுள்ளார் என்றும், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளையொட்டி வேலூர் மக்கான் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் முறையாக செயல்படுத்தவில்லை. … Read more

"இப்படி பண்ணிட்டாரே அண்ணாலை".. நிருபர் எழுப்பிய கேள்வி.. மா. சுப்பிரமணியன் கொடுத்த 'நச்' பதில்

சென்னை: திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். திமுகவின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவேன் என பல மாதங்களுக்கு முன்பே கூறி புயலை கிளப்பினார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் இதுதொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சில முக்கிய அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை … Read more

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கவில்லை… பிரியாணிதான் வாங்கினார் – வெளியான புதிய ஆதாரம்!

Annamalai Rafael Watch Bill Controversy: தனது ரஃபேல் வாட்ச்சின் பில்-ஐ அண்ணாமலை இன்று வெளியிட்ட நிலையில், அண்ணாமலை கூறிய கருத்துகளுக்கும், அவர் வெளியிட்ட பில்லிலும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது அதுகுறித்த புதிய ஆதாரமும் வெளியாகியுள்ளது.

11 சுற்றுலாத்தலங்களில் சோலார் மின் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு

சென்னை: காலநிலைக்கு ஏற்ற கிராமங்கள் திட்டத்தின் கீழ் 11 சுற்றுலாத் தளங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டிடங்கள் சோலார் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 11 கிராமங்களை தேர்வு செய்து ‘காலநிலைக்கு ஏற்ற கிராமங்கள்’ (climate resilient villages ) ஆக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நாகை மாவட்டம் கோடியக்கரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம், … Read more

வாட்ச் நான் வித்தேன்னு எழுதி தரேன்… நீ வாங்கினேன்னு எழுதி குடு… வைரலாகும் அண்ணாமலை மீம்ஸ்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அவரது ரபேல் வாட்சின் ரசீதை வெளியிட்டுள்ளார். அதில், வேறொரு நபரிடம் இருந்து 3 லட்சத்துக்கு வாட்சை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும், அந்த வாட்சின் ரசீது அண்ணாமலை பெயரில் இல்லாததால் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அண்ணாமலை தனது வீட்டு வாடகைக்கு, பெட்ரோல் செலவுக்கு, ஊழியர்களின் சம்பளத்துக்கு நண்பர்கள்தான் பணம் கட்டுவதாக கூறியுள்ளார். இதனால் இதுபோன்ற நண்பர்கள் நமக்கு … Read more

உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை இல்லை… உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி தேவாரத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு உரிய ராணுவ மரியாதை கொடுக்கப்படாமல் உடல் ஒப்படைத்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ”தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை … Read more

அண்ணாமலைக்கு போன் போட்ட மோடிஜி… தம்பி நீ இங்க வராதே… இதுதான் விஷயமாம்!

DMK Files குறித்த செய்திகள் தான் ஊடகங்களில் இன்றைய தினம் (ஏப்ரல் 14) தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில் மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் ரஃபேல் வாட்ச் பில்லை செய்தியாளர்கள் முன்னிலையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதன்பிறகு 15 நிமிட வீடியோவில் திமுகவினரின் சொத்து மதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அண்ணாமலை பேட்டி பின்னர் பேசிய போது தமிழக அரசியல், அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தல், திராவிடக் … Read more

’என்னை மாத்தனும்மா மோடிகிட்ட போங்க’ சொந்த கட்சிக்காரர்களை சாடிய அண்ணாமலை

சென்னை கமலாலயத்தில் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, என்னை மாத்துனும்னா மோடிக்கிட்ட டெல்லி போய் நேரா கம்ப்ளைண்ட் கொடுங்க என ஆவேசமாக கூறினார்.