ஆகா, அருமையான திட்டம்! பிரதமருக்கு நன்றி தெரிவித்த கையேடு கோரிக்கை ஒன்றை வைத்த முதல்வர் ஸ்டாலின்!

“பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் செயல்படுத்திட வேண்டும்” என்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அவரின் அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி. இப்பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும். தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் மற்றும் … Read more

“பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து” – நயினார் நாகேந்திரன்

பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என்பதால், அதற்கு விளக்கம் தர முடியாது என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தொடர்பாக பாஜகவின் தேசியத் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அமைத்து தான் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டதாகவும், யாரும் தனியாக போட்டியிட்டது இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.  Source link

பி.எம்.மித்ரா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும் எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி … Read more

நடையை கட்டும் அண்ணாமலை..? மேலிடம் எச்சரித்தும் கேட்கல.. பாஜகவில் பரபர..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக அதிமுகவுடன் இணைந்து பயணித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2022 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவம் நடைபெற்றது. குறிப்பாக தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ”அதிமுகவுடன் … Read more

Video: மின்சாரம் தாக்கி யானை பலி… உயிரிழந்த நேரடி காட்சிகள் வைரல்

Elephant Death Viral Video: கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அந்த யானைகள் கடந்த மாதம் தனித் தனிக்குழுக்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து  உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களுக்கு வருகின்றன.  இதனால், விளைநிலங்களில் பயிர்களை சேதத்திற்கு உள்ளாகுகின்றன. விவசாயிகள் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துகொள்ள வயல்வெளிகளை சுற்றிலும் அனுமதியின்றி … Read more

புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அறிவிப்பு. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய  ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் … Read more

அடேங்கப்பா! அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! 38 பேர் மனுதாக்கல்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நாளை மாலை 3 மணியுடன் மனுத்தாக்கள் நிறைவடைய உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வரும் 26 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட இன்று காலை எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவருக்கு முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் … Read more

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், … Read more