Erode East Bypolls: பாஜக வேட்பாளரை அறிவித்தாலும்… 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' – ஜெயக்குமார்

Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,”ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லாமல் வெறும் வாக்குகள் மட்டும் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. பேனர் விவகாரம் தெரியாமல் ஏற்பட்ட எழுத்துபிழை” என … Read more

தைப்பூச திருவிழாவுக்கு பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்: பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு

திண்டுக்கல்: தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் மலை மீது நடைபெறும் தங்கத் தேர் புறப்பாடு நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வந்தும் முருகனை தரிசனம் செய்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி … Read more

சாலையில் கிடந்த 8 சவரன் நகை: மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்

வத்தலக்குண்டு அருகே சாலையில் கிடந்த 8 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை மீட்ட தூய்மை பணியாளர்கள், அதை உரியவரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு ஊராட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் தூய்மை பணியாளர்களான ஜோதி, பஞ்சுபாண்டி ஆகிய இருவரும் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் மணி பர்ஸ் ஒன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்து பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது அதில், தங்க நகை மற்றும் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் … Read more

போதை மறுவாழ்வு மையத்தில் அடி, உதை.. சிறுவனுக்கு அரங்கேறிய கொடூரம்.! 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகே மெதிபாளையத்தில் வசித்து வரும் அகிலா என்பவருக்கு மனோஜ் குமார் என்ற 14 வயது மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து குழந்தைகளை அகிலா வளர்த்து வந்துள்ளார். சிறுவன் மனோஜ் குமார் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவது, கோழி திருடுவது உள்ளிட்ட நிறைய தீய பழக்கங்களை கொண்டுள்ளார். எனவே, அவரை சோழவரம் அருகே இருக்கும் ஜனப்பன்சத்திர தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் … Read more

நாளை முதல் 6ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம். இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தை மாத பிரதோஷம் , பௌர்ணமியை முன்னிட்டு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் 40,000 போலி வாக்காளர்கள்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 பூத்களிலும் 30,000 முதல் 40,000 வரையிலான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை (பிப்.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக அரசு அடியாட்களைக் கொண்டு கட்சியினரைக் கொண்டு அங்கு முறைகேடாக வாக்கு செலுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது. எனவே, அந்தத் தொகுதியில் உள்ள 238 பூத்களிலும், 30 ஆயிரம் முதல் 40 … Read more

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழையும், எட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.02.2023) அதிகாலை 03:30 – 04:30 மணி அளவில் இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை (03.02.2023) நிலவக்கூடும். இதன் காரணமாக, 02.02.2023: … Read more

செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்துக் கொண்டது ஏன்? நீடிக்கும் மர்மம்?

சென்னை: சென்னை செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  செங்குன்றம் அடுத்த வடகரை பாபா நகர் அனெக்ஸ் பகுதி சேர்ந்தவர் சதீஷ் 35. இவர் சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணியாற்றி வந்தார். தனது பெற்றோருடன் வசித்துவந்த போலீஸ் சதீஷ் அப்பா அம்மாவுடன் தங்கி இருந்தார். நேற்று இரவு அவர் பிராந்தி பாட்டிலுடன் மயக்க நிலையில் இருந்தபோது கண்டறியப்பட்டார். அம்மா மலர் மணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே அக்கம் … Read more

கோவை அருகே வீட்டில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை

கோவை: கோவை அருகே அருணாச்சல கவுண்டர் வீதியில் உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகேஷ் கண்ணா, ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. கைதான இருவர் அளித்த தகவலின் பேரில் மனோஜ் குமார் வயது 22 விமல்குமார் வயது 24, மற்றும் முரளி வயது 30 ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.