சாதாரண மக்கள் முதல் ஆளுநர் வரை மிரட்டும் விசிக கட்சியை தடை செய்ய பாஜக கோரிக்கை.!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக கட்சியின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கிய நிலையில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை சிவா மற்றும் பழனிவேல் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீண்டும் ஆண்டிமடம் தாலுக்காவை சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும்.  சாதாரண மக்கள் முதல் ஆளுநர் … Read more

மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு!!

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் இயங்கிவரும் ராமகிருஷ்ணாபுரம் குருகுல பள்ளியில் மாணவர்கள் சிக்கனும், கத்தரிக்காயும் சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து முதலில் சுமார் 50 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு மேலும் 50 மாணவர்களுக்கு அதே போன்று வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அச்சம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை … Read more

‘இரட்டை இலை’ சின்னம் கோரும் இபிஎஸ்ஸின் இடைக்கால மனு: தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் … Read more

அதிமுகவில் 3 நாட்கள் திக் திக் அரசியல்; எடப்பாடிக்கு 3 பிளஸ் பாயிண்ட்!

இரட்டை இலைக்கான சண்டை பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்றைய தினம் (ஜனவரி 31) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்த ஒருவாரத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து 10ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும். அதன்பிறகு வேட்பாளருக்கான பிரச்சாரத்தில் சின்னத்தை வைத்து தான் மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும். எனவே அதிமுகவிற்கு இரட்டை இலை மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிக்கலில் எடப்பாடி அதுவும் குறுகிய காலகட்டத்தில் மீட்டெடுக்க வேண்டிய … Read more

கோவை : ஒரே நாளில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 255 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் – நான்கு பேர் கைது.!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பு அற்ற முறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் படி, ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கடையில் சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகளை 61 பெட்டிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசை பதுக்கி வைத்து … Read more

பாகிஸ்தானில் தொழுகையின் போது நேர்ந்த கொடூரம்! 46 பேர் உடல் சிதறி பலி..!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் புகழ்பெற்ற மசூதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து தொழுகை நடத்திச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் அந்த மசூதியில் தொழுகை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்தவர் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தில் அந்த மசூதியின் ஒரு பகுதி அப்படியே இடிந்து அங்கிருந்தவர்கள் … Read more

பெட்ரோல் பங்கில் பலமுறை வேலை கேட்டும் தராததால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது..!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பலமுறை வேலை கேட்டும் தராததால், பங்க் மீது, பெட்ரோல் குண்டு வீசிய நபர் சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டார். கடந்த 28-ஆம் தேதி இரவு பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் மீது ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிய நிலையில், ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பரமக்குடியை சேர்ந்த கணேசன் என்பது … Read more

ஜெயலலிதா கட்சியையே சிலர் ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் – ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த தொடரில் முதல்வர் அளித்துள்ள பதில்கள் வருமாறு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுகிறார்களே? இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக … Read more