ஈரோடு மேடையில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் – அண்ணாமலை

ஈரோட்டில் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அமைச்சர்கள் பேசிய வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். அதனை தொடங்கி வைத்தபின் பேட்டியளித்த அண்ணாமலை, கோவிலை இடிப்பது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோவை அப்படியே வெளியிட்டுள்ளதாகவும், அவை வெட்டி ஒட்டப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். இன்னும் 10 ஆண்டுகளில் … Read more

தமிழகத்தில் 30+ ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக டி. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக சி.பழனி நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கே.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஆர்.வி.ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்னர். கோவை … Read more

“கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை” – வீடியோ விவாகரத்துக்கு திமுக பதிலடி..!

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை மலிவான பிரசாரத்தில் ஈடுபடுவதாக திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் … Read more

தண்ணீர் தொட்டி இருந்தும் இரு பஸ்நிலையங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் பயணிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் பயணிகள் நிற்க இடம்இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் வசதியில்லாததால் பயணிகள் தவிக்கின்றனர்.பொள்ளாச்சி நகரில் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் ஏற வருகின்றனர். வாரத்தில் அனைத்து நாட்களும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, பழனி, உடுமலை, திருப்பூர், கிணத்துக்கடவு, நெகமம் வழித்தட பஸ்கள் நின்று … Read more

தருமபுரி | பொம்மிடி பவுனேசன் மறைவு – டாக்டர் இராமதாஸ் இரங்கல்!

பாமக செயல்வீரர் பொம்மிடி பவுனேசன் மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தருமபுரி மாவட்டம் பொம்மிடி பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், பா.ம.க செயல்வீரருமான பவுனேசன் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பொம்மிடி பவுனேசன் அவரது இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். 1996&ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்..!! முட்டை விலை தொடர்ந்து சரிவு!

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது. இந்நிலையில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.90 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 4.60 ஆக விலை … Read more

வைரல் எதிரொலி: சேலம் அருகே பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியலின இளைஞர் ஒருவர், கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாகக் கூறி, அவரை ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டி, தாக்க முற்பட்ட திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், திமுகவில் இருந்து மாணிக்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் … Read more

30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் – தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலனும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த … Read more

Viral Video: ஒரே மிதி… முதலையை நசுக்கி மானை காப்பாற்றும் யானை..!

தண்ணீருக்காக விலங்குகள் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது தான் இந்த வேட்டை சம்பவம் அரங்கேறுகிறது. வீடியோவில் பார்ப்பதற்கு கோடை காலம் போல தெரிகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் யானை, மான் உள்ளிட்டவை எல்லாம் ஒரே இடத்தில் தண்ணீர் பருக குழுமியிருக்கின்றன. அந்த தண்ணீருக்குள் தான் முதலையும் இருந்திருக்கிறது. வேட்டைக்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது, மான் குட்டிகள் தாகத்துக்காக வந்து தண்ணீர் பருக வருகின்றன. வேட்டை கிடைத்துவிட்டது என ஒரே குஷியில் இருந்த முதலை, அனைத்து தந்திர வேலைகளையும் … Read more