திமுக ஆட்சியில் பலன் பெறாத மக்களே இல்லை; அதற்கான அங்கீகாரம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து பழனிசாமி தரப்பு தாக்கம் செய்த முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை தவிர்த்து பிற கட்சிகள் தேர்தல் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. ஈரோடு கிழக்கில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணி குழு … Read more

சென்னை: திருமணமான மூன்றே நாளில் புதுமாப்பிளை பலி – மதுவால் நிலைகுலைந்த குடும்பம்!

திருமணமான மூன்றே நாளில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு ஷோபனா என்பவருடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் செனாய் நகரில் உள்ள ஷோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்திற்காக நேற்று சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று மாலை மணிகண்டன், தனது நண்பர் வீட்டுக்கு போய் வருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து நண்பரை … Read more

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு; 370வது பிரிவை மீட்டெடுப்பதில் உறுதியாக இருக்கும் ராகுல்

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு; 370வது பிரிவை மீட்டெடுப்பதில் உறுதியாக இருக்கும் ராகுல் Source link

17 வயது சிறுவனுடன் மாயமான 33 வயது பெண் போக்சோவில் கைது.!

விருதுநகர் மாவட்டத்தில் 17 வயது சிறுவனுடன் மாயமான 33 வயதுடைய பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மகாலட்சுமி (33) அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற மகாலட்சுமி காணவில்லை என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் செங்கல் சூலையில் … Read more

லிட்டருக்கு ரூ.35 அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை!!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் கடுமையான சூழலை சந்தித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ள பாதிப்பு ஆகியவை மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளன. தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை மட்டும் பூர்த்தி செய்ய முடியும். அதனால் பாகிஸ்தான் அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் … Read more

நாய் தின்ற சவர்மா சிக்கன் சமுத்ரா ஓட்டலுக்கு பூட்டு..! இப்பிடில்லாமா விற்பீங்க…?

தூத்துக்குடி சமுத்ரா ஓட்டலுக்கு வெளியே சவர்மா தயார் செய்ய வைத்திருந்த சிக்கனை நாய் தின்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து ஓட்டலுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் சமுத்ரா என்ற பெயரில் பேமிலி ரெஸ்டாரண்ட் இயங்கி வந்தது. இந்த ஓட்டலுக்கு வெளியே உள்ள சாலையின் பிளாட்பாரத்தில் சவர்மாவுக்கான சிக்கனை வேகவைக்கும் மிஷின் வைத்துள்ளனர். அப்படி தெருவில் எந்த ஒரு சுகாதாரமுமின்றி வைக்கப்பட்டிருந்த சவர்மா சிக்கனை அந்த வழியாக சென்ற தெரு … Read more

அமைச்சர் தலைமையில் இன்று கூட்டம்: 10, 11, 12-ம் வகுப்புதேர்வு குறித்து ஆலோசனை – கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று (ஜன.30) ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் 13 முதல் ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். 11, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களைக் கண்டறிதல், பெயர்ப் பட்டியல், … Read more

சென்னை மழை விடுமுறை; எதிர்பார்ப்பில் மாணவர்கள்; கூடவே அந்த 2 விஷயங்கள்!

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் படபடவென கொட்டித் தீர்த்தது. சென்னையில் மழை சென்னையில் முதலில் லேசான மழை பெய்த நிலையில் பின்னர் கனமழையாக மாறியது. … Read more

சேலத்தில் முதல் முறையாக சர்வதேச பூனைகள் கண்காட்சி: 20 வகைகளில் 200 பூனைகள் பங்கேற்பு

சேலம்: சேலத்தில் முதல் முறையாக சர்வதேச பூனை கண்காட்சியில் 20 வகையிலான 200கும் மேற்பட்ட அறிய வகை பூனைகள் பங்கேற்றன. சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது செல்ல பிராணியான பூனைகளுடன் பங்கேற்றனர். குறிப்பாக நாட்டு பூனை வகைகள் பெங்கால் டைகர், பெர்சியன் லாங் ஹேர், ஏக்சாய்டிக் வெரைட்டி, சியா மிஸ், நைஜீரியன் கேட் உள்ளிட்ட 20 வகையான சுமார் 200 கும் மேற்பட்ட … Read more