வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு, பிரச்சாரம் என்று தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் சார்பில் ஈபிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக இரண்டு பிரிவாக இருப்பதால் வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஓபிஎஸ் அணி விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என கூறியுள்ளது. அதே நேரத்தில் … Read more

கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் பணம் வசூலித்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்.. பொதுமக்கள் போராட்டம்..!

தஞ்சாவூரில், கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் ஏராளமானோரிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூல் செய்த நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான நிலையில், நகைக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தஞ்சாவூர் மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டுவரும் அசோகன் தங்க மாளிகையில் நகை சிறுசேமிப்பு, நகைகளுக்கு வட்டியில்லா கடன், வீட்டுமனை சிறுசேமிப்பு உள்ளிட்ட திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் சேர்ந்து பணம் கட்டியுள்ளனர். மேலும் வேறு இடங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகையை மீட்டு, வட்டி இல்லா நகைக்கடன் என்ற ஆசையில் அசோகன் … Read more

இந்தியாவுக்கே அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்து – காயத்ரி ரகுராம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர் கோடி தூக்கி கட்சியை விட்டு வெளியே வந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையை போட்டு தாக்கி பேசி வருகிறார். தொடக்கத்தில் அண்ணாமலை மீது மட்டுமே அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த காயத்ரி தற்போது பாஜக கட்சிக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார். இந்நிலையில், காயத்ரி ரகுராமுக்கு திமுகதான் கொம்பு சீவி வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அண்ணாமலையை அனுதினமும் வம்பிழுத்து வரும் காயத்ரி ரகுராம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் … Read more

ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியை குறி வைக்கும் பாஜக..!

நீலகிரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாஜகவின்சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஈரோடு கிழக்கு தேர்தல் பொறுத்தவரை அதிமுக இபிஎஸ், ஜி.கே. வாசனை சந்தித்து ஆதரவு கேட்டு விட்டார்.  ஈரோடு கிழக்கு தொகுதி பொருத்தவரை மாநில தலைவர் … Read more

கோடியக்கரை, முத்துப்பேட்டை, புதுகையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் … Read more

புதுச்சேரியில் ஜி20 மாநாடு கூட்டம்: புதுப்பொலிவுடன் தயாராகும் இடங்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு

புதுச்சேரியில் ஜி20 மாநாடு கூட்டம்: புதுப்பொலிவுடன் தயாராகும் இடங்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு Source link

திருவள்ளூர் : வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில்கள் விற்பனை – 2 பெண்கள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆரணி கம்பர் தெரு மற்றும் அத்திக்குளம் மேடு பகுதிகளில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கம்பர் தெரு பகுதியில் திருட்டுத்தனமாக … Read more

மனைவியை கொன்று உறவு கொண்ட சைக்கோ கணவன்!!

மனைவியை கொலை செய்து உடலுறவு கொண்டு பின்னர் வீட்டின் அருகிலேயே புதைத்த சைக்கோ கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் காலடி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த ரத்னவள்ளி (35) என்ற பெண்ணை 3ஆவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திடீரென தனது மனைவி ரத்னவள்ளியை காணவில்லை என்று மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரத்னவள்ளியை தேடினர். அப்போது அவர்களுக்கு மகேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. … Read more

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்ற வேண்டும்: பாஜக தீர்மானம்

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்ற வலியுறுத்தி பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மதுரையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவித்தும், ஜி-20 மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை, மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்றும், … Read more

ஈரோட்டில் அதிமுக வெல்வது நிச்சயம்… செல்லூர் ராஜு அபார நம்பிக்கை!

மதுரை கோச்சடை பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் தனது மகன் தமிழ்மணி நினைவாக இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி மற்றும் மகன்களுடன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு தேர்தலில் குழப்பமே இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள்; மக்கள் தான் தலைவர்கள்; மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி … Read more