மநீம வலைதளத்தில் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள் – ‘காங்கிரஸ் உடன் இணைப்பு’ என பதிவு
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கத்தை ஹேக் செய்து முடக்கிய ஹேக்கர்கள், காங்கிரஸ் கட்சியுடன் மநீம இணைய உள்ளதாக பதவிட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதளப் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், ஜன.30-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக மநீம ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. … Read more