சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ சாவு

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ நேற்று அதிகாலை திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் முருகப்பிரியா நகரில் வசித்து வந்தவர் மகேந்திரன் (59). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 1986ல் காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளார். சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி … Read more

கன்னியாகுமரி | மத போதகரின் வெளிநாட்டுகாதல் மனைவியை சிறை பிடித்த மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், பருத்தி விளையை சேர்ந்த திருமணம் செய்து கொள்ளாத மத போதகருக்கு (வயது 62) சில வருடங்களுக்கு முன், இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அது காதலாகி, கடந்த டிசம்பர் அந்த பெண்ணை நாகர்கோவில் பகுதி தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார் அந்த மத போதகர். வயதை மீறிய இவரின் திருமணத்திற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்றிரவு உணவு வாங்குவதற்காக … Read more

பத்ம விருதுகள்: தமிழகத்தில் யார் யாருக்கு விருது?

புதுடெல்லி: பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு … Read more

2023 பத்ம விருதுகள் அறிவிப்பு; தமிழகத்தில் 6 பேர் தேர்வு.!

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்காக பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, நடப்பு … Read more

ஜல்லிக்கட்டுக்கு எதிராக கவிஞர் தாமரை: மாடு பிடி வீரர்கள் அமைப்பு கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக கவிஞர் தாமரை: மாடு பிடி வீரர்கள் அமைப்பு கண்டனம் Source link

#கோவை | 7 மாதக் குழந்தையின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு! உயிரை காப்பற்றிய மருத்துவர்கள்!

பொள்ளாச்சி அருகே 7 மாதக் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய பிளாஸ்டி துண்டை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சை சம்பவம் அறநெக்ரியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  குழந்தையின் மூக்கில் உள்நோக்கி குழாய் செலுத்தி மருத்துவர்கள் சோதனை செய்த போது, மூச்சுக் குழாயில் … Read more

2012-ல் பள்ளிப் பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கு: 8 பேரும் விடுதலை

சென்னை: கடந்த 2012-ம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஸ்ருதி 2-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் சிறுமி ஸ்ருதி தினந்தோறும் பள்ளி சென்றுவந்தார். இந்நிலையில், 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, பள்ளி … Read more

மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்!

சென்னை உயர் நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு அந்த இடத்தை தர பார்க்கிறார்கள் – பாஜக மீது ஸ்டாலின் தாக்கு

மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று  உரையாற்றினார்.  இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர்,  அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்,  பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,  திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் உரையாற்றினார். … Read more