ஈரோட்டில் வெற்றி நிச்சயம்…. திமுக மூத்த அமைச்சர் அபார நம்பிக்கை!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் 1,519 பயனாளிகளுக்கு 937 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வழங்கினர் – இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, “ஈரோடு தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் – திமுக நிச்சயம் வெற்றி பெறும். … Read more

கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,00,001வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

திருவள்ளூர்: கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,00,001வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (25.01.2023) திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 1,00,001-வது … Read more

45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்: அடுத்தடுத்து கடந்துசென்ற கப்பல்கள்

45 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து இரண்டு கப்பல்கள் கடந்து சென்றன. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இனைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து அந்தமான், விசாகப்பட்டினம், கோவா, கேரளா, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கடந்து செல்ல வந்திருந்த கப்பல்கள் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக பாம்பன் … Read more

கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் வந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்.! நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் இன்று காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.  அந்த ஹெலிகாப்டரில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அவரது உதவியாளர்கள் மற்றும் விமானிகள் உள்பட மொத்தம் ஆறு பேர் பயணம் செய்தனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் அருகே சென்றது.  அப்போது அந்த பகுதியில் கடுமையான மேக மூட்டம் இருந்ததனால், விமானி அவசர அவசரமாக … Read more

புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு … Read more

கடம்பூர் மலைப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள உகினியம் கிராமத்தில், ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் தரையிறங்கியது.. வாழும் கலை யோகா நிறுவனர் ரவிசங்கர் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக வந்தபோது, கடுமையான பனிமூட்டம் காரணமாக வழி தெரியாததால் பைலட் ஹெலிகாப்டரை தரை இறக்கியுள்ளார். பனிமூட்டம் குறைந்த பிறகு ஹெலிகாப்டர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது. Source link

உடல் நலக்குறைவு: நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் திருவட்டார் அருகேவுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்தவாறு சிக்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். Source … Read more

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு… நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, உடல்நலக்குறைவால் கடந்த ஜன. 4ஆம் தேதி மறைந்தார். அவரின் மறைவைக்கு பின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியது.  ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்.27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் … Read more

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணை ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணையிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீதிமன்றம் சென்றபோது சேற்றில் வழுக்கி கீழே விழுந்து கை எலும்பு முறிந்ததாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். மனுதாரரின் மனு குறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.