”என்ன இது! அச்சு அசல் ஒரிஜினல் மாதிரியே இருக்கு”..போலி ஆவணங்களால் நொந்துபோன சார் பதிவாளர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு பதிவு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி ஓசூர் சார் பதிவாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஓசூர் மாநகராட்சி தற்பொழுது தரம் உயர்த்தப்பட்ட நிலையில் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது. ஏற்கனவே தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலானது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறு முதல் பெரு தொழில் நிறுவனங்கள் … Read more

நுங்கு, குலோப் ஜாமுன் பிரச்னை: சித்த மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு ஆஜரான டாக்டர் ஷர்மிகா

நுங்கு, குலோப் ஜாமுன் பிரச்னை: சித்த மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு ஆஜரான டாக்டர் ஷர்மிகா Source link

மகள் காதலனுடன் ஓட்டம் தாய் தூக்கில் தொங்க.. தந்தை விஷம் குடித்தார்..! குடும்பமே நிர்மூலமான சோகம்..

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதியில் மகள் கலப்பு திருமணம் செய்த மன வேதனையில் தாய் தூக்கிட்டும், தந்தை விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை – சங்கரம்மாள் தம்பதியினரின் மகள் பேச்சியம்மாள் , இவர் காளிமுத்து என்ற வேறு சாதி இளைஞரை காதலித்து கலப்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் சங்கரம்மாளும், தந்தை சின்னதுரையும் கடும் விரக்தியில் இருந்து … Read more

திராவிட மாடல் | ஆங்கிலம் ஏன்… தமிழில் பயன்படுத்தலாமே? – உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: ‘தற்போது திராவிட மாடல் என்கிறார்கள். அதில் மாடல் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன? அதை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும். முழுமையாக தமிழில் பயன்படுத்தலாமே’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் தூய தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும் என தமிழக அரசு … Read more

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்: தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: குடியரசு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம். அதேவேளையில், அவ்விருந்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம்! அத்துடன், தமிழ்நாடு … Read more

பால் பாயாசம் தயாரிப்பதற்காக மெகா சைஸ் உருளி காணிக்கை

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தான சேர்மன் டாக்டர் விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தந்திரி தினேஷன் நம்பூதிரிப்பாட், மனோஜ், நிர்வாகி விநயன், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் சேற்றுவாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், பால் பாயாசம் தயாரிப்புக்கு மெகா சைஸ் உருளியை காணிக்கையாக செலுத்தினார். பிப். 25ம் தேதி முதல் இந்த உருளியில் பால் பாயாசம் தயார் செய்து மூலவருக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் அன்னதானத்துடன் பக்தர்களுக்கு பால் பாயாசம் வழங்கப்படும். இரண்டேகால் டன் … Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்து தண்டவாளத்தில் முடிந்த காதல் – விசாரணையில் அதிர்ச்சி!

விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர். ரயிலில் சிக்கி உடல்கள் அடையாளம் தெரியாத அளவில் சிதறி சின்னா பின்னமாகி இருந்ததால் உடல்களை காட்பாடி ரயில்வே போலீசார் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், ரயில்வே டிராக்கில் கிடந்த பள்ளிப்பையில் இருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து சிறுமியின் அடையாளத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதிர்ச்சியாக … Read more

வீடுகட்டி தருவதாக பண மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது.!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி எஸ்.கே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ். ஜவுளி தொழில் செய்து வரும் இவர் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்படியில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.  இந்த வீட்டை கட்டிக் கொடுப்பதற்காக, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடன் சதுர அடிக்கு ரூ.2,200 என்று கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்.  அந்த ஒப்பந்தத்தின்படி கதிர்ராஜ், ஒரு கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாயை சுரேந்தினிடம், கொடுத்தார். இதை … Read more

சத்தீஸ்கரில் இளம் சாமியார் தர்பார்.. காங்கிரஸிற்கு தலைவலி.. யார் இந்த பாகேஷ்வர் பாபா?

சத்தீஸ்கரில் இளம் சாமியார் தர்பார்.. காங்கிரஸிற்கு தலைவலி.. யார் இந்த பாகேஷ்வர் பாபா? Source link

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தை மார்பில் பச்சை குத்திய பிரபல நடிகர்..!!

இலங்கையின் கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்கத் துவங்கிய கஷ்ட காலத்திலும், சக கலைஞர்களுக்கு உதவி செய்தார் என்பது ஆச்சரிய வரலாறு. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாத காரணத்துனால நாடகக் கம்பனில வேலைக்கு சேர்ந்தனர் எம்.ஜி.ஆரும் அவரோட அண்ணன் சக்கரபாணியும்.நாடக கொட்டகையில் துவங்கிய அவரது வள்ளல் தன்மை, தமிழக முதல்வராக கடைசி மூச்சு வரையிலும் தொடர்ந்தது. அவரது மரணத்திற்கு பின்னும் தொடர்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் … Read more