சாக்கு முட்டையில் ஏரியில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்.! போலீசார் விசாரணை.!

இளம்பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என்.கொத்தூர் பகுதியில் உள்ள ஏரியிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஏரிக்கரையில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் … Read more

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2022 – 2023-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் மாவட்டம், மண்டல அளவில் ஜனவரியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் … Read more

அரசியலில் நான் நல்லதையே நினைக்கிறேன்; அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் – ஜி.கே.வாசன் பேட்டி

புதுக்கோட்டை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் அதற்கான வெற்றி வியூகத்தை அதிமுக வகுத்துள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் ஜி.கே.வாசன். அப்போது அவரிடம் அதிமுக பிளவுபட்டிருப்பது, இபிஎஸ் அணியினர், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தது, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இது குறித்து ஜி.கே.வாசன், “கூட்டணியில் அதிமுக தான் பிரதான கட்சி. அந்தக் கட்சி … Read more

மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை முழு மனதுடன் வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் … Read more

இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேறு கட்சி வேட்பாளரை ஆதரிப்பதா என ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செங்கல்பட்டு: தந்தையுடன் தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுவன் செப்டிக் டேங்கில் விழுந்து பலி

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), லாரி டிரைவரான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகன் பிரதீஷை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். இந்நிலையில், அங்குள்ள ஊராட்சி குழாயில் … Read more

மீண்டும் தமிழ்நாடு, திருவள்ளுவர் ஆண்டு: ஆளுநர் ரவி குடியரசு தின அழைப்பிதழ்

மீண்டும் தமிழ்நாடு, திருவள்ளுவர் ஆண்டு: ஆளுநர் ரவி குடியரசு தின அழைப்பிதழ் Source link

குடும்பத் தகராறு: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெரிய வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் சிவக்குமார் (26). இவரது மனைவி அகல்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அகல்யா கணவனைப் பிரிந்து குழந்தைகளோடு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். … Read more

குட் நியூஸ்.. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து 26ம் தேதி அறிமுகம்..!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம். மத்திய – மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து ரூ.325 விலையிலும் தனியாருக்கு ரூ.800 விலையிலும் விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கொரோனா பெருந்தொற்று காலத்தில் … Read more