அமைச்சர் தலைமையில் இன்று கூட்டம்: 10, 11, 12-ம் வகுப்புதேர்வு குறித்து ஆலோசனை – கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று (ஜன.30) ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் 13 முதல் ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். 11, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களைக் கண்டறிதல், பெயர்ப் பட்டியல், … Read more

சென்னை மழை விடுமுறை; எதிர்பார்ப்பில் மாணவர்கள்; கூடவே அந்த 2 விஷயங்கள்!

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் படபடவென கொட்டித் தீர்த்தது. சென்னையில் மழை சென்னையில் முதலில் லேசான மழை பெய்த நிலையில் பின்னர் கனமழையாக மாறியது. … Read more

சேலத்தில் முதல் முறையாக சர்வதேச பூனைகள் கண்காட்சி: 20 வகைகளில் 200 பூனைகள் பங்கேற்பு

சேலம்: சேலத்தில் முதல் முறையாக சர்வதேச பூனை கண்காட்சியில் 20 வகையிலான 200கும் மேற்பட்ட அறிய வகை பூனைகள் பங்கேற்றன. சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது செல்ல பிராணியான பூனைகளுடன் பங்கேற்றனர். குறிப்பாக நாட்டு பூனை வகைகள் பெங்கால் டைகர், பெர்சியன் லாங் ஹேர், ஏக்சாய்டிக் வெரைட்டி, சியா மிஸ், நைஜீரியன் கேட் உள்ளிட்ட 20 வகையான சுமார் 200 கும் மேற்பட்ட … Read more

திருப்பூர்: குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவன்… மாமியாருக்கும் கத்தி குத்து!

திருப்பூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர் திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – சுஜாதா தம்பதியர். இவர்கள் ரித்திகா (8) ரிதனிக் (6) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார், இந்த நிலையில் சுஜாதா அருகிலுள்ள பனியன் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், சுஜாதாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து … Read more

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி விடுதியில் மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரன் (20). இவர் கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி பாராமெடிக்கல்ஸ் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுமித்ரன் யாரிடமும் சரியாக பேசாமல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த … Read more

அதிமுக வழக்கு இன்று விசாரணை!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு விவகாரம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பது குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் கடந்த வாரம் முறையிடப்பட்டது. இதனையடுத்து இன்று முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதனையடுத்து இன்று சற்று நேரத்தில், அதாவது காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர … Read more

பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டம் வானூரில் பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகனான லாரி டிரைவர் வெங்கடேசன்,  தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரியம்மன் கோவில் அருகே வாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மூவரும் பட்டாக்கத்தியுடன் அப்பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்ததாகவும் … Read more

"பணத்தை நம்பும் கட்சி திமுக" – வீடியோவை வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பும் கட்சி என்று சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகள் சார்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திமுக என்பது … Read more