குடியரசு தின விழா.. டாஸ்மாக் ஊழியா்களுக்கு வழங்கிய விருது வாபஸ்.!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி  ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்து சிறப்பாக பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்தனர். அதன் காரணமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு … Read more

எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையான டயானவின் ஆடை..!!

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஏல நிறுவனமான ‘சாத்பைஸ்’ நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது. இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது. இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு … Read more

அதிவேகமாக சென்ற கார் மோதியதில் பைக்கில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அதிவேகமாக சென்ற கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. செம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது பைக்கில் சென்றபோது, சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்தில் சாலையை கடந்துள்ளார். அப்போது, அவ்வழியே அதிவேகமாக சென்ற கார் மோதியதில், பைக்கில் சென்ற மோகன் ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநரிடம்  விசாரணை மேற்கொண்டனர்.   … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: “எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமையும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். … Read more

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர, தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ … Read more

தஞ்சை: 1000 பேரை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்: சித்து விளையாட்டு மன்னன் தலைமறைவு

தஞ்சை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையான அசோகன் தங்க மாளிகை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடை தஞ்சை மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவதாகவும் கூறி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தஞ்சை மற்றும் சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளம்பரம் செய்து … Read more

கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்

களக்காடு: களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் நீர்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி வடிநில பகுதியின் நீர்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. அதன்படி களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. பறவைகள் ஆராய்ச்சியாளர் மரிய அந்தோணி தலைமையில், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் 15 பேர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more

'பெரியாரையும் அண்ணாவையும் பார்த்ததில்லை; ஆனால்..' – தொண்டர்கள் மத்தியில் உருகிய உதயநிதி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயில் பகுதியில் பூரண கும்பம் மரியாதை, சிலம்பாட்டம், புலியாட்டம் ஆடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் கலைஞர் திடல் பகுதியில் … Read more

விளக்கு ஏற்ற சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காண்டோன்மென்ட் எஸ் பி ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மகள் அபிநயா வீட்டில் விளக்கு ஏற்ற சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவர் ஆடையின் மீது தீப்பிடித்து உள்ளது. வேகமாக பரவிய தீ உடல் முழுவதும் பரவியது. அபிநயாவின் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் தீக்காயுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு … Read more