பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

பழனி: விழாக்கோலம் பூண்ட பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்னும் சற்று நேரத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வருகை புரிந்துள்ளார். 16 ஆண்டுகளுக்கு பின் பழனி குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. எல்.இ.டி. திரை மூலம் ஒளிப்பரப்பு .!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக கொண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வருகின்றன. இந்த விழாவின் முக்கிய … Read more

இது தேவையா ? செல்ஃபி மோகத்தால் பாம்பிடம் கடி வாங்கி உயிரைவிட்ட இளைஞர்

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ் (24). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் அரட்டையடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக பாம்புகளை கொண்டு வித்தை காட்டுபவர் சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஜெகதீஷ், பாம்புகளை காட்டுமாறு கூறியதாக கூறப்படுகிறது. பாம்பாட்டியிடம் இருந்து நாகப்பாம்பை வாங்கிய ஜெகதீஷ், ஆபத்தை உணராமல், அதனுடன் சேர்ந்து வித்தை காட்ட முயன்றதாக தெரிகிறது. தன் தோள் மீது பாம்பை வைத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஜெகதீஷ் திட்டமிட்டுள்ளார். … Read more

செய்யாறு அருகே பைனான்சியர் கடத்தல் – 6 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பணம்-கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக பைனான்சியரை காரில் கடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், பணிமுடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை கடத்தி கத்தியால் தாக்கியதுடன், கடத்திய இடத்திலேயே விட்டுவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்டதாக ராணிப்பேட்டை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

சென்னை/ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப். 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் … Read more

பாஜக அழைத்தால் முடிவெடுக்க டிடிவி தினகரன் தயார்: இரட்டை இலை கிடைப்பதில் சிக்கலா?

அதிமுக உட்கட்சி மோதல் வலுப்பெற்று ஆளுக்கொரு திசையாக பிரிந்து நிற்பதற்கு பாஜகவே காரணம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை தன்னை அழைத்தால் அப்போது அது குறித்து முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் தனது கட்சியின் சின்னமான குக்கர் சின்னத்தை காட்டி வாக்கு … Read more

காதலியோடு சண்டை… ஆத்திரத்தில் பென்ஸ் காரை சம்பவம் செய்த காதலன் – உறைந்துபோன மக்கள்

Kanchipuram Youth Destroyed Benz Car: காதலுக்கு கண்கள் இல்லை என்ற பழமொழியை பலரும் கடந்து வந்திருப்பீர்கள். அதேபோல், காதல் தோல்வியின் சோகத்தையும் கேள்விப்பட்டிருப்பீர்கள், அனுபவித்திருப்பீர்கள். காதல் தோல்வி என்றால் தாடி வளர்ப்பதும், கண்ணீர் விடுவதாகவும் தேவதாஸ் காலத்தில் இருந்து தேவரகொண்ட காலம் வரை அதே தான் இருக்கிறது.  மேலும், காதலிக்கும் போது ஜோடிகளுக்குள் சண்டை வந்தால் அருகில் இருக்கும் சிலவற்றை தூக்கி வீசுவதும், போட்டு உடைப்பதும் சில நேரங்களில் அரங்கேறும். ஆனால், அவை அனைத்தும் அந்த நொடியின் … Read more

பழனி மலைக் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு: எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு

திண்டுக்கல்: 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி மலைக் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலில்நடைபெறும் குடமுழுக்கை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பழனி மலைக் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. குடமுழுக்கின்போது … Read more