பொங்கல் விழா | தலைவர்கள் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையான இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களிலும், புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வணங்கி பொதுமக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள … Read more

ஆளுநருக்கு ஆதரவாக கருணாநிதி; போகி புகை கிளப்பிய பாஜ!

ஆளுநர் ரவிக்கு ஆதரவாக ஆதாரங்களை அடுக்கி வைத்து திமுக உள்ளிட்ட கட்சிகளிடையே பாஜக புகையை கிளப்பி இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜ செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காமராஜர் ஆட்சி காலத்தில் 24.12.1961 அன்று சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் ‘இனி தமிழ்நாடு சட்டமன்றம் என அழைப்போம். தமிழ்நாடு அரசு என பேசுவோம்’ என்று மகிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னார். எங்கேயெல்லாம் மெட்ராஸ் மாகாணம் என்று உள்ளதோ அதையெல்லாம் தமிழ்நாடு … Read more

"ஆன்லைனால் கடைசிவரை எனக்கு டோக்கனே கிடைக்கல" – 28 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் விஜய்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 28 காளைகளை அடக்கி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதலிடம் பெற்றுள்ளார். அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி 2ஆம் இடம் பிடித்தார். மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி 13 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். முதலிடம் பெற்ற விஜய்க்கு முதலமைச்சர் மு,க ஸ்டாலின் … Read more

சேமிப்பை தொடங்க காத்திருக்காதீர்கள்.. உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 எளிய வழிகள் இதோ!

சேமிப்பை தொடங்க காத்திருக்காதீர்கள்.. உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 எளிய வழிகள் இதோ! Source link

ஜல்லிக்கட்டில் திமுக சார்பில் கருணாநிதி, ஸ்டாலின், உதயசூரியன் பொறித்த தங்க நாணயம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 11 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  இதில், 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்.,க்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.  காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.  17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த … Read more

அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்!!

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதாக சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் … Read more

காணும் பொங்கல் | சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?

சென்னை: சென்னையில் காணும் பொங்கலன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து மாற்றங்கள் குறித்த உடனடி தகவல்களை RoadEaseapp மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது … Read more

கதவை இழுத்து சாத்தும் ஓபிஎஸ்; மத்திய அரசு அதிர்ச்சி!

அதிமுகவின் தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடுமையான போட்டியும் மோதல் போக்கும் நிலவி வருகிறது. இவர்கள் 2 பேருமே தங்களது ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு கட்சியை கைப்பற்ற பல்வேறு வழிகளில் திட்டங்களை தீட்டியபடி காய்களை நகர்த்திக்கொண்டு வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி ஒருப்படி மேலே போய் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என முடிசூட்டிக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியைவிட்டு நீக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் உச்ச … Read more

விறுவிறுப்பாக நடந்து முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – முதல் 3 இடங்களில் யார், யார்?

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசாக கார், இரண்டாம் பரிசாக பைக் மற்றும் மூன்றாம் பரிசாக பசுமாடு ஆகியவை வழங்கப்பட்டன.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காலையில் தொடங்கி 11 சுற்றுகளாக … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு: 28 காளைகளைப் பிடித்தவருக்கு கார் பரிசு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று(ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 … Read more