ஊழியர்களுக்கு இருக்கை இல்லையா? சென்னையில் நடந்த அதிரடி சோதனை!

தமிழகத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அமர இருக்கை வசதி செய்து தராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, இணை ஆணையர் வே.விமலநாதன் அறிவுறுத்தல் பேரில், சென்னையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடைபெற்றது. அப்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் இல்லாத நேரத்தில் பணியிடத்துக்கு அருகில் … Read more

நேபாள விமான விபத்தில் இறந்தவர்ககளில் 68 பேரில் 5 பேர் இந்தியர்கள்..!! இன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு..!!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த … Read more

சானமாவு வனப்பகுதியில் 40 காட்டு யானைகள் தஞ்சம்.. வீடுகளை விட்டு வெளியேற வர வேண்டாமென வனத்துறை எச்சரிக்கை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் 40கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   கர்நாடகா மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் ஜவுலகிறி வனபகுதிக்கு  இடம் பெயர்ந்தது. இந்த காட்டு யானைகளில் 40க்கும் மேற்பட்ட யானைகள்,  கெலமங்கலம் சினிகிரி பள்ளி வழியாக சாண மாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. இதையடுத்து  ராமாபுரம், ஆழியாளம், பாத்தகோடா,போடூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு,  இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் … Read more

வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்க முயற்சியா? – கே.பாலகிருஷ்ணன் கேள்வி

விருத்தாசலம்: புதுக்கோட்டை வேங்கை வயல்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக ஆக்குகின்ற முறையில் விசாரணை நடக்கிறதா? என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்சிப் பிரமுகர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டம்வேங்கைவயலில் நடந்திருக்கின்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருத்த அவமானம். அந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுவற்புறுத்தி வரும் சூழ்நிலையில், தமிழக முதல்வர், ‘விரைவாககுற்றவாளிகளை … Read more

ஒரே நாளில் ரணகளம் ஆகும் அதிமுக… MGRஐ வச்சு ஸ்டாலின் போடும் அரசியல் கணக்கு!

மக்கள் மத்தியில் எவ்வளவு தான் நற்பெயர் பெற்று வைத்திருந்தாலும், கடைசியில் வாங்கு வங்கி அரசியல் தான் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசியல் களம் திமுக , அதிமுக என இருபெரும் திராவிட கட்சிகளின் மோதலாகவே 46 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. இதில் தனக்கான வாக்கு வங்கியை தக்க வைப்பதுடன், எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதும் சுவாரஸியமூட்டும் வியூகம். முதல் பெரிய தேர்தல் தற்போது முதல்வராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலின் , அடுத்தகட்டமாக … Read more

335 மாடுபிடி வீரர்கள், 800க்கும் அதிகமான காளைகள் – களைகட்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக மதுரையின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில், இன்று மாட்டுப் பொங்கலையொட்டி பாலமேட்டில் போட்டி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்துவதே பாலமேடு ஜல்லிக்கட்டின் சிறப்பு. காலை 8 மணிமுதல் தொடங்வுள்ள இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் அதிகமான காளைகளும் … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு… 49 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தென்காள் பாசன விவசாயிகளுக்கும் அவனியாபுரம் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக … Read more