சானமாவு வனப்பகுதியில் 40 காட்டு யானைகள் தஞ்சம்.. வீடுகளை விட்டு வெளியேற வர வேண்டாமென வனத்துறை எச்சரிக்கை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் 40கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் ஜவுலகிறி வனபகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்த காட்டு யானைகளில் 40க்கும் மேற்பட்ட யானைகள், கெலமங்கலம் சினிகிரி பள்ளி வழியாக சாண மாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. இதையடுத்து ராமாபுரம், ஆழியாளம், பாத்தகோடா,போடூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு, இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் … Read more