மூச்சுக்குழாயில் சிக்கிய பொருள்: அசுர வேகத்தில் செயல்பட்டு அசத்திய அரசு மருத்துவர்கள்

நமது உலகில் மருத்துவர்கள் கடவுள்களாக பார்க்கப்படுகிறார்கள். மருத்துவத் துறை ஒரு உன்னதமான துறையாக கருதப்படுகின்றது. இந்த நிலையில், மருத்துவத்தின் மகத்துவத்துக்கும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.   குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த கண்ணாடி போன்ற அயல் பொருளை அகற்றி உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.  பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் … Read more

தி.மலை செய்யாறு அருகே ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார். தொழிலதிபர் ராமச்சந்திரனை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரனின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் தொலைபேசியில் ரூ.50 லட்சம் கேட்டு மர்ம கும்பல் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிறுமி பாலியல் பலாத்காரம்.! வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை.!

அரியலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் வினோத்குமார்(29). இவர் 15 வயதுடைய சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி சிறுமியை … Read more

“பொன்னி நதி பாக்கணுமே”.. மீண்டும் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்.. அடுத்தடுத்து கடந்த 3 கப்பல்கள்.. பாட்டுப்பாடி ரசித்த மக்கள்…

45 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து 3 கப்பல்கள் கடந்துச் சென்றதை மக்கள் கண்டு ரசித்தனர். பாம்பன் தூக்கு பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாலம் வழியாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வந்த கப்பல்கள் பாலத்தை கடந்துச் செல்ல காத்திருந்தன. எனவே, இன்று காலை பாலம் திறக்கப்பட்டதும், பைலட் கப்பல் ஒன்றும் கேரளா, கோவா செல்லும் … Read more

அதிமுக கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுப்பு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடல்

கரூர்: “திமுகவின் வேலைக்காரர்களாக காவல் துறையினர் செயல்படுன்றனர்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனத்திடம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் இன்று (ஜன. 25) மதியம் 12.50 மணிக்கு மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது: ”அதிமுக சார்பில் கட்சி நிர்வாகரீதியான மாவட்டங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று (ஜன. 25 … Read more

ஈரோடு கிழக்கு: பாமக வழியில் சமக – முடிவை அறிவித்த சரத் குமார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் இருந்த நிலையே தற்போதும் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்ற பாமக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தது. மீதமுள்ள கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடர்கிறார்கள் என்றாலும் அதிமுகவின் … Read more

உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? தொல்லியல் துறைக்கு கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 2021 ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி … Read more

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் இன்று காலை யாக வேள்வி நடந்தது

பழநி: பழநி முருகன் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை கோயில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தற்போது முழுவீச்சில் கோயிலில் இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. கும்பாபிஷே … Read more

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குராணா கருத்து

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குராணா கருத்து Source link