திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி கூடங்கள் மூடல்; கடைகளுக்கு அனுமதி: சென்னையில் மக்கள் குழப்பம்

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகள் செயல்படுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி முறையான அறிவிப்பு வெளியிடாத காரணத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இதன்படி இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்து மூடப்பட்டு இருந்தது. ஆனால், இறைச்சி கடைகள் செயல்படுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் எந்த வித முறையான … Read more

ஜல்லிக்கட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போட்டியின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ‘மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த .இரா.அரவிந்தராஜ் (வயது 24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா

ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜனவரி 16) கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகவும், உழவர் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் விழா ஈஷாவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை கோலகலமாக நடைபெற்றது. … Read more

`திருக்குறளை சொல்லு… பெட்ரோலை அள்ளு'- பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வித்தியாச முயற்சி!

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம் என மதுவுக்கு எதிராக போராடிவருகிறார் ஒரு பங்க் உரிமையாளர். மதுவுக்கு எதிராக பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கரூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான முயற்சியாக திருக்குறளில் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளை மனப்பாடமாக கூறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி ஊக்குவித்து வருகிறார். மது அருந்துவோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

#BigBreaking :: ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்ற வீரரை காளை முட்டியதில் உயிரிழந்தார். அதேபோன்று திருச்சி மாவட்டத்தை அடுத்த சூரியூர் ஜல்லிக்கட்டை பார்க்க சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த கண்ணன்கோன் பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் காளை முட்டியதில் பரிதாபமாக … Read more

குமரியில் பரபரப்பு.. பெட்ரோல் இல்லாத வண்டி எதுக்கு..?; பைக்கை கால்வாயில் வீசிய இளைஞர்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புண்ணியம் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வந்த நபர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி தேடிப் பார்த்தனர். ஆனால் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் தண்ணீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் சேர்ந்து விசாரித்ததில், அந்த மோட்டார் சைக்கிள் மாத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு … Read more

ஜல்லிக்கட்டு: உயரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் – முதல்வர் உத்தரவு

சென்னை: பாலமேடு மற்றும் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது, எதிர்பாரதவிதமாக உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் … Read more

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: விசிக கருத்து!

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் (ஆர்விஎம் – ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இயந்திரம் தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதி (இன்று) தேர்தலை ஆணையம் செயல்முறை விளக்கம் அளிக்கவுள்ளது. இதற்காக, அங்கிகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளுக்கும், 57 மாநில கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் … Read more

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை தகவல்

தமிழகத்தின் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இன்று மற்றும் நாளை (16.01.2023 மற்றும் 17.01.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும். அதேபோல் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான … Read more

திருத்தணி முருகன் கோயிலில் நிறை, குறை தெரிவிக்க பக்தர்களுக்கு கட்டணமில்லாத தொலைபேசி நம்பர்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் கார், பஸ், ரயில்கள் மூலம் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தணிகை இல்லம், கார்த்திகேயன் இல்லம், சரவண பொய்கை விடுதிகள் உள்ளது. மலைக்கோயில் அடிவாரம் சரவண பொய்கை, மலைக்கோயில் பகுதிகளில் முடிகாணிக்கை செலுத்துவதற்காக காணிக்கை மண்டபங்கள் உள்ளன. … Read more