மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு… நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, உடல்நலக்குறைவால் கடந்த ஜன. 4ஆம் தேதி மறைந்தார். அவரின் மறைவைக்கு பின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியது.  ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்.27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் … Read more

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணை ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதில் தர ஆணையிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீதிமன்றம் சென்றபோது சேற்றில் வழுக்கி கீழே விழுந்து கை எலும்பு முறிந்ததாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். மனுதாரரின் மனு குறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் தீண்டாமை விவகாரம்: "நான் முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன்”- சீமான்

“வேங்கைவயல் விவகாரத்தில் பிறகட்சிகளை குற்றம் சொல்ல, விசிக தலைவர் திருமாவளவனுக்கு தகுதியில்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக அறிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சென்றார். அங்கு அப்பகுதியை பார்வையிட்ட அவர், மக்களை சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தார். இதைத் … Read more

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்… ஈரோடு பள்ளி வளாகத்தில் பரபரப்பு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்… ஈரோடு பள்ளி வளாகத்தில் பரபரப்பு Source link

#BIG NEWS : மிக முக்கிய அரசியல் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி..!!

அரசியல் மேடைகளையும் இலக்கிய மேடைகளிலும் அனல் பறக்கும் தனது பேச்சால் தனி அடையாளம் பெற்றவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய இவர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் 2016-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றிய நாஞ்சில் சம்பத், … Read more

குடியாசு தின விழா கொண்டாட்டம்: மெரினாவில் தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட தடை

சென்னை: குடியாசு தின விழா கொண்டாட்டம் காரணமாக மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் கலந்துகொள்ளும் … Read more

பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு… கமலும், திமுக ‘பி’ டீமும்- ஜெயக்குமார் சுளீர்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த விஷயம் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. இதில் லேட்டஸ்டாக வந்த செய்தி என்னவென்றால் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது தான். ஏற்கனவே டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். தேர்தல் நிலைப்பாடு அப்போதே கமல் ஹாசன் நிச்சயம் திமுக கூட்டணிக்கு … Read more

ஈரோடு மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை சாகுபடி குறைவு: குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரிக்கை

ஈரோடு: பனிபொழிவால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தியூர் சந்தையில் ஒரு வெற்றிலை ரூ.2.40 காசுகளுக்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வெற்றிலை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டுவருகிறது. இந்த வெற்றிலைகள் அந்தியூர் வாரச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் வெற்றிலை சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.  100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கட்டு … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் காணிக்கை எண்ணும் பணி: முதன்முறையாக யூடியூப்பில் நேரலை!

புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. முதல் முறையாக கோயிலின் யூடியூப் பக்கத்தில் காணிக்கைகள் எண்ணுவது நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் உண்டியலில் காணிக்கை செலுத்துவது … Read more