சென்னை : மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.! கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை.!

சென்னையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சீனிவாசன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதையடுத்து அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கொரோனா தடுப்புபணி தன்னார்வலர் ஒருவர் அப்பெண்ணை மீட்டு, இதுகுறித்து அவர் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

465 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழகத்தில், ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எனவே, தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை பிப்.15க்குள் திறக்க முடிவு: அமைச்சர் முத்துசாமி

சென்னை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை பிப்.15க்குள் செயற்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் விரைவுப்படுத்தி நடைபெற்று வருகிறது. ஜனவரி இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். அதன் பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை செய்து பார்ப்பது மிகவும் அவசியம். இதற்கு 10 நாள் தேவை என அதிகாரிகள் … Read more

Jallikattu 2023: அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 58 பேர் படுகாயம்

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் காணும் பொங்கல் பண்டிகையான நேற்று அந்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதியின்றி நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இது குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், கூடமலைக்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி இல்லாமல் நடைபெற்றதை அடுத்து உடனடியாக அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினார். அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் கலைந்து சென்றனர். இந்த ஜல்லிக்கட்டு … Read more

ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் நீண்டநேரம் போராடி சாணமாவு வனப்பகுதிக்கு விரட்டினர்.

அனல் பறந்த ரேக்ளா ரேஸ் களம்: புழுதி பறக்க தாவி ஓடி பரிசை தட்டித் தூக்கிய குதிரைகள்!

மோகனூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாபெரும் குதிரை எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பொங்கல் விழாவை ஒட்டி குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் குதிரை எல்கை பந்தயம் நடைபெற்றது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பந்தயத்தில் பெரிய குதிரைக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய, புதிய குதிரைகளுக்கு … Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! தொழிலாளி கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஜெகதீஷ் (31). இதே பகுதியை சேர்ந்த பாட்டி வீட்டிற்கு 10 ஒயர் சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியின் தாய் மற்றும் அவரது பாட்டி அருகிலுள்ள கடைக்கு சென்று உள்ளனர். அப்பொழுது சிறுமி மட்டும் பாட்டி வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு … Read more

காளை முட்டியதில் கண் பார்வை இழந்த வாலிபர் உயிரிழப்பு: இதுதான் நடந்தது !

காளை முட்டியதில் கண் பார்வை இழந்த வாலிபர் உயிரிழப்பு: இதுதான் நடந்தது ! Source link

3 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்.. இன்று மதியம் தேதி அறிவிப்பு..!

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்க உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த மூன்று மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் வருகிற மார்ச் மாதம் முடிவடைய இருப்பதால் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

சென்னை: கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து தற்போது, எஸ்பி.செல்வராஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இந்த கொலை வழக்கு தொடர்பாக, … Read more