மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் செய்தது யார்?- ஆறுமுகசாமி பதில்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் , உறவினர்கள் , சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் , அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது. இதனைத்தொடர்ந்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் … Read more

கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது தவறானது: வேல்முருகன்

சென்னை: கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது தவறான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் சமீபத்தில் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட், இலுமினைட், … Read more

அடடே மீண்டும் மழைக்கும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 20.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் … Read more

அதிகாலையில் லேசான பனிமூட்டம், மழை: தமிழக மாவட்டங்களுக்கான வானிலை அறிக்கை

அடுத்த சில நாட்களுக்கு தமிழக மாவட்டங்களுக்கான வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (20.01.2023) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான /மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.   உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் … Read more

சாயத்தில் ஊறவைத்து விரிக்கப்படும் பச்சைப் பட்டாணி: அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்சங்குடு சந்தையில் பச்சைப் பட்டாணிக்கு சாயம் ஏற்றியது ஆய்வில் கண்டறிய பட்டுருக்கிறது. தொடர்ந்து திருச்சங்குடு சந்தையில் வண்ணம் ஏற்றிய பச்சைப் பட்டாணி அதாவது சாயம் பூசி பட்டாணி விற்பனை செய்வதாக நகராட்சிக்கு புகார் வந்ததை அடுத்து இன்று நகராட்சி ஆணையர் கணேசன் உத்தரவின் பெயரில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் பச்சைப் பட்டினியில் சாயம் கலந்து விற்கிறார்களா என அனைத்து கடைகளிலும் விசாரணை மேற்கொண்டனர். காலை முதலே ஆய்வு மேற்கொண்டதில் அங்கு ஒரு கடையில் … Read more

`இனி மாதம் ஒருமுறை மின்கட்டணம் உயருமா?' – அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

”விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சையாகப் பொய் பேசுகிறார்” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரண்டாம் நாள் நேர்காணலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் மற்றும் அணியின் துணை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more

காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி, விவசாயி படுகாயம்.! அச்சத்தில் கிராம மக்கள்.!

கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார். கோவை மாவட்டம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள திருமாலூரை சேர்ந்தவர் விவசாயி சவுந்தர்ராஜன்(58). இவர் நேற்று காலை சங்கிரி கருப்பட்டராயன் கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக காட்டு யானை ஒன்று குட்டியுடன் குறுக்கே வந்துள்ளது. இதைப் பார்த்து அச்சமடைந்த சவுந்தர்ராஜன், யானைகளிடமிருந்து தப்பிக்க மொபட்டை வந்த வழியாக திருப்பியுள்ளார். ஆனால் காட்டு யானை சவுந்தர்ராஜனை துதிக்கையால் தாக்கியுள்ளது. … Read more

இம்மாத இறுதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்! அமைச்சர் கெடு!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். முதலில் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால … Read more

மேட்டுப்பாளையம் தனியார் பள்ளியில் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்திய -ரஷ்ய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ரஷ்ய நாட்டின் கலாச்சாரம், நடனம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக இந்திய -ரஷ்ய கலாச்சார குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலாச்சார நடனங்களை ஆடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்ய கலைஞர்கள் தமிழ் பாரம்பரிய உடை … Read more