ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாயவிலை கடை திறப்பு: நல்ல திட்டங்களை தந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்கிறார் முதல்வர்: அமைச்சர் காந்தி பேச்சு

ராணிப்பேட்டை: தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை தந்து தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று, ராணிப்பேட்டையில் ரூ.56.30 லட்சத்தில் நூலகம், நியாய விலை கடை திறந்து வைத்து அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். ராணிப்ேபட்டை நவ்லாக் ஊராட்சியில் ரூ.41.80 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் கிளை நூலக கட்டிடம் மற்றும் மணியம்பட்டு ஊராட்சியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடையையும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார். திறப்பு … Read more

ரஜினிக்கு இமயமலை மாதிரி எனக்கு இந்த ஊரு..! வனிதா அமர்க்கள பர்த்டே கொண்டாட்டம்

ரஜினிக்கு இமயமலை மாதிரி எனக்கு இந்த ஊரு..! வனிதா அமர்க்கள பர்த்டே கொண்டாட்டம் Source link

தமிழக அரசியல் கட்சி தொண்டர்களே கவனத்திற்கு | உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி – சிக்கிய 1050 வாகனங்கள்! 

வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்கள் ஓட்டுவதை எப்படி அனுமதிக்கின்றனர் என்று, தமிழக அரசுக்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது. கரூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவரின் அந்த மனுவில், வாகனங்களின் எண் பலகை பாதுகாப்பு மற்றும் அடையாளத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.  இந்த வாகன எண் பலகை பலகை வைப்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை மோட்டார் வாகன சட்டம் வகுத்துள்ளது. ஆனால் … Read more

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் சொன்ன முக்கிய செய்தி..!

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், “முதலமைச்சரின் அறிவுரைப்படி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சைகை மூலம் தமிழ் தாய் வாழ்த்து பாடியதற்கு ஒட்டு மொத்த … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 இடங்களில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம்

சென்னை: தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரமானது அனைவரின் பயன்பாட்டிற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து தமிழக அரசு மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் … Read more

ஓபிஎஸ் அணியில் முக்கிய விக்கெட் காலி: அதிமுகவுக்கு கோவை செல்வராஜ் குட்-பை!

அதிமுகவில் இருந்து விலகுவதாக அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

'ஆளுநரை குறை கூறவில்லை, ஆனால்…' – அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்றும் அதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தான் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னர் ஆன்லைன் தடை சட்டம் மற்றும் ஒழுங்குப்படுத்துவதற்கு அதற்கான விதியை அரசு முன்னாள் நீதிபதிகள் வைத்து உருவாக்க உள்ளது. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை அரசு உருவாக்க உள்ளது. … Read more

சென்னையில் இருந்து நெல்லை திரும்ப தென்மாவட்ட ரயில்களில் அலைமோதும் கூட்டம்: ரூ.3900 டிக்கெட் கூட கிடைப்பதில்லை

நெல்லை: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்களில் நேற்று முதல் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து நெல்ைல திரும்ப ரூ.3900 பிரிமியம் தட்கல் டிக்கெட் கூட கிடைக்காமல் பயணிகள் திண்டாடுகின்றனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதுண்டு. குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை உள்ளிட்ட ரயில்களில் இரு மார்க்கத்திலும் கூட்டம் அதிகம் காணப்படும். வேறு வழியின்றி சில பயணிகள் ஏசி கோச்சுகளில் டிக்கெட் எடுத்து பயணிப்பதும் உண்டு. … Read more

மீனாட்சி கல்வி குழுமத் தலைவர் ஏ.என்.இராதாகிருஷ்ணன் காலமானார்..!

மீனாட்சி கல்வி குழுமத்தின் தலைவரும், ‘தின இதழ்’ நாளிதழ் மற்றும் மீனாட்சி தொலைக்காட்சியின் நிறுவனருமான ஏ.என்.இராதாகிருஷ்னன் சென்னையில் இன்று (டிச.3ம் தேதி) காலமானார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கடந்த 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மீனாட்சியம்மாள் பல்மருத்துவக் கல்லூரி. கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி வழங்கப்பட்டது. இதன் வேந்தராக இருந்தவர் ஏ.என்.இராதாகிருஷ்ணன். அதோடு, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவக் … Read more