இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில்பாலாஜி 

சென்னை: “மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல், புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது” என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (நவ.28) தொடங்கியது. சென்னையில் இந்த முகாமை ஆய்வு இன்று செய்தபின், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இதுவரை 15 லட்சம் மின் … Read more

மேற்கில் திரும்பிய மழை… கொடிவேரியில் வெளுத்து வாங்கியாச்சு… அடுத்த பெருமழை எப்போது?

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும். குறிப்பாக வட தமிழகத்திற்கு அதிகப்படியான மழைப்பொழிவை அளிக்கும். ஆனால் நடப்பாண்டு இருமுறை பருவமழை தீவிரம் காட்டிய நிலையில், அதன்பிறகு மழையை காண முடியவில்லை. இந்திய வானிலை மையம், சென்னை வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை ஆய்வாளர்கள் எனப் பலரும் மழை தொடர்பான தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர். வானிலை ஆய்வு மையம் தகவல் இந்த சூழலில் வட தமிழகத்தில் சில்லென்ற வானிலை மட்டுமே காணப்படுகிறது. மழை … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு, இன்று முதல் சிறப்பு முகாம்கள்

தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து இருந்தது, அத்துடன் இதற்கானப் பணிகளையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது. மேலும் மின் … Read more

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு ஜவுளி துறையின் இன்றைய நிலையே உதாரணம்: பிருந்தா காரத்

திருப்பூர்: ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு ஜவுளி துறையின் இன்றைய நிலையே உதாரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். நவம்பர் புரட்சி தினத்தின் 105-ம் ஆண்டை முன்னிட்டு திருப்பூர் குமார் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்தூண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் தொழில்துறை கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பதற்கு ஜவுளி துறையே சிறந்த உதாரணம் … Read more

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் – வலுக்கும் கோரிக்கைகள்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கைகள் மீண்டும் திமுகவில் எழ தொடங்கி உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021 மே 7 தேதி பதவி ஏற்றது. 18 மாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை ஒருமுறை மட்டுமே இலக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்துறை … Read more

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வானவில் மன்றம்! முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

திருச்சி மாவட்ட காட்டூரில் உள்ள அரசு திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வானவில் மன்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மதியத்திற்குள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13,710 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்படும். இந்த திட்டம் குறித்து அனைத்து மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும்  பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா. சுதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் “தமிழக அரசு … Read more

மின் கம்பியில் தொங்கிய விமானம்.. இருளில் மூழ்கியது 1 லட்சம் வீடுகள் உள்ள நகரம்..!

அமெரிக்காவில் நேற்று இரவு, 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மின் கம்பியில் மோதி அந்தரத்தில் சிக்கிக்கொண்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ள நகரம் இருளில் மூழ்கியது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் மொவ்ண்ட்கொமெரி என்ற நகரம் உள்ளது. இந்த நகரின் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது நேற்று இரவு 2 பேர் பயணித்த சிறிய ரக … Read more

'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது' – அன்புமணி

சென்னை: “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா … Read more

உடல் ஆரோக்கியம், விளையாட்டுகளில் சாதிக்க குழந்தைகளுக்கான கூடம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகர் முழுவதையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி குளக்கரைகளில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டன.  இதற்கிடையில் கோவையில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க மாணவ,மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. … Read more